சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு மாநிலங்களவை உறுப்பினர் சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 63 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட உடற்கூராய்வு கட்டடத்தின் சாவியை சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் மருத்துவ அலுவலர் ஸ்ரீவித்தியாவிடம் இன்று மதியம் ஒப்படைத்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காங்கிரஸ் திமுக கூட்டணி முடிவுக்கு வந்ததாக பார்க்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, இரண்டு கட்சிகளும் உறவு தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வளவு நாட்களாக செயல்பட்டு வந்தனர் அந்த வகையில் உறவு தொடரும் என்றும் முழுமையாக இருவரும் நம்புகின்றோம். மிசா சட்டத்திற்கு பகிரங்கமாக இந்திரா காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் ஆராசா கூறியதற்கு இதுகுறித்து கார்த்திக் சிதம்பரம் எம்பி கூறுகையில்
எமர்ஜென்சி தப்பு என்று இந்திராகாந்தி சொன்னது சரித்திர உண்மைதான் என்றும் எந்த ஒரு அரசியல் தலைவரும் எந்த ஒரு அரசாங்கமும் எந்த அரசியல் கட்சிகளும் தவறுகளே செய்யவில்லை என்றும் எப்படி கூற முடியும் என்றும் சில சமயங்களில் எடுக்கின்ற முடிவுகள் பிற்காலத்தில் தவறு வருத்தம் தெரிவிக்கிறது ஆளுமை மிக்க தலைவர் தான் செய்த அவர்கள்தவறை ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் இந்திராகாந்தி இறப்புக்கு பிறகு சீக்கியர்கள் பெரிய கொடூரம் நடந்தது அதற்கு மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி எமர்ஜென்சி தவறு என்று கூறியுள்ளார். இதை ஒப்பீடு செய்தால், பாஜக செய்ததை எதையாவது தவறு என்று ஒத்துக் கொள்கிறார்களா?. பெரிய தலைவர்களால் மட்டும் தான் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும்போது தவறு என்று சொல்லக்கூடிய மனப்பான்மை உள்ளது என்றார்.
சிவகங்கையில் இஸ்லாமிய அமைப்புகள் ஈரானுக்கு எதிராக கார்த்திக் சிதம்பரம் எம்பி பேசியதாக அதனை கண்டித்து சிவகங்கை நகர் முழுவதும் வால்போஸ்டர்கள் போராட்டம் நடத்து குறித்த கேள்விக்கு, நாளைக்கு நான் தாலிபான் செய்வது தப்பு என்று சொன்னால் இஸ்லாமியருக்கு எதிராக பேசியது அர்த்தமா? என்றும் தாலிபான் செய்வதை யாராவது ஏற்றுக் கொள்கிறீர்களா? தாலிபானில் பெண்களுக்கு உரிமை கிடையாது, பெண்கள் படிக்க கூடாது என்று சட்டம் போட்டுள்ளனர். தாலிபானுக்கு எதிராக பேசிய உடனே இஸ்லாமியருக்கு எதிராக பேசுறேன் என்று அர்த்தமாகிவிடும?. ஈரானில் நடந்த ஆட்சியில் மக்களை துன்புறுத்தியுள்ளனர். விலைவாசிக்கு எதிரான போராட்டத்தில் 7 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். பெண்களை தூக்கிலிட்டுள்ளனர். எழுத்தாளர்களை கைது செய்துள்ளனர். ஒலிம்பிக் வீரரை தூக்கில் ஏற்றி உள்ளனர்.
இதையும் படிங்க: ஈரானுக்கு அடுத்தடுத்து ஆபத்து..!! நிலநடுக்கம் ரிக்டரில் 4.3ஆக பதிவு..!! நடுக்கத்தில் மக்கள்..!!
அந்த அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்க மாட்டேன் என்று தான் கூறினேன். முழுக்க முழுக்க ஈரான் மக்களுடன் நிற்கிறேன். அங்கு அப்பாவி மக்களை கொள்வதே கண்டிக்கின்றேன். ஈரான் உச்சபட்ச தலைவருக்கு எதிராக சொல்கிறேன் என்பதற்காக இஸ்லாமியர்களை எதிர்த்து சொல்வது என்று அர்த்தம் ஆகி விடாது. ஈரானில் ஜனவரி மாதம் விலைவாசியில் உயர்வுக்காக ஏழாயிரம் பேர் இறந்துள்ளனர். அதற்கு யாரும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை இதற்கு மதத்திற்கு சம்பந்தம் இல்லை. இதை இந்து செய்தாலும் சரி, முஸ்லிம் செய்தாலும் சரி கார்த்திக் சிதம்பரம் கண்டிப்பான் என்றார்.
இதையும் படிங்க: “எங்கள தடுப்பது எவன்டா” - 11 அணுகுண்டுகளுக்கான பவரை கையில் வைத்துக் கொண்டு கொக்கரிக்கும் ஈரான்... அமெரிக்காவிற்கு நேரடி சவால்...!