பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படும் பகுதி, இந்தியாவின் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் போதும், 1947 பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதி அழகிய மலைகள், ஆறுகள் நிறைந்தது என்றாலும், அரசியல் அமைதியின்மை, பொருளாதாரக் குறைகள், பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டுப்பாடு மற்றும் உள்ளூர் மக்களின் அதிருப்தி ஆகியவை இங்கு தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன. இங்கு நடைபெறும் தாக்குதல்கள் இரண்டு வகையானவை.
ஒன்று, பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான உள்ளூர் போராட்டங்கள் மற்றும் மோதல்கள். மற்றொன்று, தீவிரவாதிகளின் செயல்பாடுகள் மற்றும் எல்லை தாண்டிய நடவடிக்கைகள். இவை PoK-ஐ தொடர்ந்து அமைதியற்ற பகுதியாக்குகின்றன. வரலாற்றுப் பின்னணி1947-இல் இந்தியப் பிரிவினையின்போது, ஜம்மு & காஷ்மீர் இளவரசு மாநிலம் இந்தியாவுடன் இணைந்தது. பாகிஸ்தான் ஆதரவு பழங்குடி படையெடுப்பு இதைத் தொடர்ந்து, போர் முடிவில் Line of Control உருவானது.

மக்கள் உயர்ந்த மின்சாரக் கட்டணங்கள், மாவுப் பொருள் பற்றாக்குறை, அரசு அதிகாரிகளின் சலுகைகள், வேலைவாய்ப்பு இன்மை, உள்கட்டமைப்பு குறைபாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக போராடுகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "WE THE LEADERS"...! எல்லாரும் ஒன்னு சேரலாம்..!! அண்ணாமலை அழைப்பு..!!
200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காஷ்மீர் மக்களின் பிரதிநிதித்துவத்தை பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசியல் அதிகாரத்திற்காக நடைபெறும் போராட்டங்களை அரசு ஒடுக்குவதாக தெரிவிக்க கூறப்படுகிறது பாகிஸ்தான் அரசு கட்டமைக்கப்பட்ட ஒடுக்கு முறையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: காலியாகும் அதிமுக கூடாரம்..? முக்கிய தலைகள் தவெகவில் ஐக்கியம்..!!