சமீப காலமாக ஒரு அசாதாரண சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டு, இங்கு மூளையைத் தின்னும் அமீபா என்று அழைக்கப்படும் நெக்லேரியா ஃபோவ்லேரி (Naegleria fowleri) என்ற அமீபாவால் ஏற்படும் தொற்று, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மூக்கின் உள் பகுதியில் உள்ள நரம்பு செல்கள் வழியாக அமீபா மூளை மற்றும் முதுகுத் தண்டு வடத்தை அடைகிறது. இந்த அமீபா நேரடியாக மனிதர்களிடையே பரவாது, மாசுபட்ட நீரின் மூலமாகவே தொற்று ஏற்படுகிறது.
குறிப்பாக, கோடை காலங்களில் நீரின் வெப்பநிலை அதிகரிக்கும்போது இந்த அமீபாவின் செயல்பாடு அதிகரிக்கிறது, இதனால் இந்த நோயின் அபாயமும் அதிகரிக்கிறது. இந்த அமீபாவின் பரவல், காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது. கேரளாவின் வெப்பநிலை உயர்வு, மழைக்காலத்தில் தேங்கிய நீரில் பாக்டீரியா மற்றும் காலிஃபார்ம் மாசுபாடு அதிகரித்துள்ளது. இந்த அமீபா 46°செல்ஸியஸ் வரை வெப்பத்தைத் தாங்கி, தொற்று ஏற்படும். மூக்கு வழியாக நுழைந்து, வாசனை நரம்புகள் (olfactory nerve) வழியாக மூளைக்கு சென்று, திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

அறிகுறிகள் தொற்றுக்கு 1-14 நாட்கள் கழித்து தோன்றும். ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, கழுத்து இறுக்கம் போன்றவை – இவை பொதுவான மூளைக் காய்ச்சல் அறிகுறிகளை ஒத்திருப்பதால், ஆரம்ப நிலையில் நோயறிதல் கடினம். பின்னர், குழப்பம், சமநிலை இழப்பு, பிரமைகள், வலிப்புகள், மயக்கம் என விரைவாக மோசமடையும்.
இதையும் படிங்க: கேரளாவை மிரட்டும் அமீபா மூளைக்காய்ச்சல்! பல உயிர்களைக் குடித்த வைரஸ்...
கேரளாவை மிரட்டி வரும் இந்த அமீபா மூளை காய்ச்சலால் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் தலா ஒருவர் மரணமடைந்தனர். இதன்மூலம் அமீபா மூளைக்காய்ச்சலால் மொத்த உயிரிழப்பு 19 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் களைகட்டப்போகும் ஓணம்.. தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்..!!