• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதியா? விரைவில் கொள்கை முடிவு எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

    பைக் டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்துத் தமிழ்நாடு அரசு விரைவில் கொள்கை முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 03 Aug 2026 17:05:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High Court Madurai Bench Asks TN Govt to Decide Policy on Bike Taxis Soon.

    தமிழ்நாட்டில் ராப்பிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மூலம் இயங்கும் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்துத் விரைந்து கொள்கை முடிவு (Policy Decision) எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, இது தொடர்பாக விரிவான பதில் மனுத் தாக்கல் செய்யத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலாளருக்கு ஆணை பிறப்பித்துள்ளது.

    மதுரையைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி சேவைகள் பொதுமக்கள் மற்றும் எளிய மக்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகின்றன. மத்திய அரசு பைக் டாக்ஸி சேவைக்கு ஒப்புதல் அளித்து, மாநில அரசுகளுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இச்சேவையை முறைப்படுத்தத் தனியாக எவ்வித ஒழுங்குமுறை விதிகளும் வகுக்கப்படவில்லை. இதனால் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது அடிக்கடி அபராதம் விதிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு எளிய ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பைக் டாக்ஸிகளை முறைப்படுத்தத் தனி அமைப்பை உருவாக்கவும், உரிமம் வழங்க விதிகளை வகுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    உயர் நீதிமன்ற மதுரை கிளை

    இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பைக் டாக்ஸிகளுக்கு மாநில அளவில் அனுமதி வழங்குவது குறித்து ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்க முடியும். அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரை பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி கிடையாது. விதியை மீறி சட்டவிரோதமாகப் பைக் டாக்ஸிகளை இயக்கி வந்தால் கண்டிப்பான முறையில் அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும் எனத் திட்டவட்டமாக வாதிட்டார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்க என்ன தயக்கம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

    உயர் நீதிமன்ற மதுரை கிளை

    அரசு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் குறுக்கிட்டு, அனுமதி இல்லாத பைக் டாக்ஸிகளில் பொதுமக்கள் பயணிப்பதைத் தவிர்க்க இது குறித்து ஏன் முன்கூட்டியே விழிப்புணர்வு விளம்பரம் செய்யக்கூடாது? ஒருவேளை பைக் டாக்ஸியில் பயணிக்கும் போது ஏதேனும் விபத்து நேரிட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மனுதாரர் தரப்பில், மாநில அரசு பைக் டாக்ஸிகளுக்கு முற்றுப்புள்ளியாகத் தடை விதிக்க முடியாது; மாறாக உரிய விதிகளின் கீழ் ஒழுங்குமுறைப்படுத்த மட்டுமே முடியும் என்று வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி அளிக்கலாமா வேண்டாமா என்பது குறித்துத் தாமதிக்காமல் விரைவாகக் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், இது குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    இதையும் படிங்க: எல் நினோ தாக்கம்: தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவுக்கு பூவுலகின் நண்பர்கள் வரவேற்பு!

    மேலும் படிங்க
    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    தமிழ்நாடு
    இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பெண்களுக்கு விரைவில் உரிய அதிகார பகிர்வு கிடைக்கும்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு!

    பெண்களுக்கு விரைவில் உரிய அதிகார பகிர்வு கிடைக்கும்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு!

    தமிழ்நாடு
    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    இந்தியா
    நடிகர் அஜித்தின் 64-வது படம்

    நடிகர் அஜித்தின் 64-வது படம் 'டேர் டெவில்'! சொந்த தயாரிப்பில் களமிறங்கும் ஷாலினி அஜித் குமார்!

    சினிமா

    செய்திகள்

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    காவிரி விவகாரத்தில் மௌனம் ஏன்? உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    பணியின் போது மொபைல் போன் பேச்சு! போக்குவரத்து காவலர்கள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

    தமிழ்நாடு
    இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து! சென்னை எழும்பூர் பணி காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பெண்களுக்கு விரைவில் உரிய அதிகார பகிர்வு கிடைக்கும்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு!

    பெண்களுக்கு விரைவில் உரிய அதிகார பகிர்வு கிடைக்கும்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு!

    தமிழ்நாடு
    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    30 ஆண்டுகால பாஜக கோட்டை சரிந்தது! பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

    இந்தியா
    பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

    பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்...? - திண்டுக்கல்லை அதிர விட்ட சம்பவம்... அதிர்ச்சி கொடுத்த துண்டுசீட்டு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share