கள்ளழகர் சித்திரை திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அணியும் சல்லடம் என்று கூறப்படும் அழகர் உடை தயாரிப்பில் மதுரை புதுமண்டபம் குன்னத்தூர் சத்திர தையல் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுரை சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 28ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் 29ஆம் தேதி திருத்தேரோட்டம் மே 1ஆம் தேதி கள்ளழகர் எழுந்தருள உள்ளார்.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதி அருகே அமைந்துள்ள குன்னத்தூர் சத்திரத்தில் அழகர் வேடமிடும் பக்தர்களுக்காக பல்வேறு வண்ணங்களில் வடிவங்களில் தயாரிக்கப்படும் சல்லடம் எனும் அழகர் உடை தைக்கும் பணி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அழகரை குளிர்விப்பதற்காக தண்ணீர் பீய்ச்சியடித்தும், அருள் வாக்குக் கூறி தீப்பந்தம் கொண்டு வரும் அணிந்து வரும் பல வண்ண ஆடையைத்தான் சல்லடம் என்கிறோம். இந்த உடை பல்வேறு வேலைப்பாடுகளோடு மதுரை குன்னத்தூர் சத்திரத்தில் தயாராகிறது. குன்னத்தூர் சத்திரத்தில் சல்லடம் உள்ளிட்ட கள்ளழகர் திருவிழாவிற்கு தேவையான அனைத்து உடைகள் தயாரிப்பு தீவிரமாகிவிடும். இது போன்ற உடைகளை குன்னத்தூர் சத்தரத்தில் மட்டுமே வாங்க முடியும். மதுரையை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் இங்கு வருகை தந்து வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: வாக்களிக்க சென்ற பெண்ணுக்கு கத்திக்குத்து..! மதுரையில் பரபரப்பு..!!
சித்திரை மாதம் பிறந்து விட்டால் இந்த உடைகள் மட்டுமே இங்கு உள்ள கடைகளில் சராசரியாக கடை ஒன்றுக்கு நூறு முதல் 200 வரை ஆடைகள் விற்பனை ஆகின்றன. அழகர் வேடமிடும் நபர்களுக்கான உடை மட்டுமன்றி, திரி, சாட்டை, , சலங்கை, என அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிச் செல்வதற்கான இடம் இந்தக் குன்னத்தூர் சத்திரம்தான். வெல்வெட் துணிகளால் தயாரிக்கப்படும் இது போன்ற உடைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் நேர்த்தி கடன்ககளை செலுத்துவதற்காக ஆர்வமாக வாங்கி வருகிறார்கள்.
இதையும் படிங்க: அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!