• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விண்ணை முட்டிய "மீனாட்சி... சொக்கநாதா..." முழக்கம்... மதுரையே குலுங்க திருக்கல்யாண வைபவம் கோலாகலம்...!

    வைரக் கற்கள் பதித்த திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட அந்தப் புனிதமான தருணத்தில், அங்கிருந்த ஒட்டுமொத்த பக்தர் கூட்டமும் "மீனாட்சி... சொக்கநாதா..." என்ற முழக்கத்துடன் தங்கள் கரகோஷங்களை எழுப்பினர்.  
    Author By Amaravathi Tue, 28 Apr 2026 08:55:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-meenakshi-thirukalyanam-2026

    மதுரை மாநகரில் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி அம்மன் - சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் இன்று பக்திப் பரவசத்துடன் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது. 

    உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரைதிருவிழா கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும்  வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி  நான்கு மாசி வீதிகளிலும்  வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினமும், நேற்றிரவு  திக்கு விஜயமும் நடைபெறகிறது.

    பின்னர் சித்திரை திருவிழாவின் 10 நாள் விழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் நடைபெற்றது. வண்ண மலர்களாலும், நறுமணத் துளசி மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட திருக்கோயில் மண்டபத்தில், அன்னை மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இனிதே அரங்கேறியது. 

    இதையும் படிங்க: மதுரை குலுங்க குலுங்க...களைகட்டும் சித்திரை திருவிழா... இன்று மீனாட்சி திருக்கல்யாணம்...!

    மதுரையின் அரசியான மீனாட்சி அம்மனுக்குப் பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு, வைரக் கற்கள் பதித்த திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட அந்தப் புனிதமான தருணத்தில், அங்கிருந்த ஒட்டுமொத்த பக்தர் கூட்டமும் "மீனாட்சி... சொக்கநாதா..." என்ற முழக்கத்துடன் தங்கள் கரகோஷங்களை எழுப்பினர்.  இந்த தெய்வீகத் திருமணத்தைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் திரண்டுள்ள நிலையில், திருக்கல்யாணம் முடிந்தவுடன் மங்கல நாண் மாற்றிக் கொள்ளும் வழக்கப்படி பெண் பக்தர்கள் அனைவரும் புதிய தாலிச் சரடை மாற்றிக் கொண்டு தங்களின் மாங்கல்ய பலம் பெருக வேண்டிக் கொண்டனர்.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் வெளி வீதி முழுவதிலும் பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் பக்தர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்ய செல்வதற்காக முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்வை காண்பதற்கு 500 ரூபாய் கட்டண ரசீது பெற்ற 2500 பக்தர்கள் காலை 5:00 மணி முதல் 7:00 மணிக்குள் வடக்கு ராஜகோபுரம் வழியாகவும், 200 ரூபாய் கட்டண ரசீது பெற்ற 3500 பக்தர்கள் வடக்கு – கிழக்கு சித்திரை வீதி அருகே அமைக்கப்பட்டுள்ள பாதை வழியாக வடக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கட்டணமில்லாமல் தரிசிக்க வரும் 3ஆயிரம் பக்தர்கள் முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படவுள்ளனர். மேலும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட என மொத்தமாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

    கோவில் வளாகத்தை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் 20 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிக வெயிலின் தாக்கம் இருப்பதால் திருக்கல்யாணம் நடைபெறும் உள்ளே  200 டன் தற்காலிக ஏசி பொறுத்தப்பட்டுள்ளது. திருக்கல்யாண மேடை முழுவதும் 2 டன் அளவிற்கான பல்வேறு வகையான பூக்களை வரவழைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1.5லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் நடைபெறவுள்ளது.

    இதேபோன்று இன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்தும் நடைபெற்ற நிலையில்  இந்த விருந்தின்போது  சாப்பிட்ட கையோடு பக்தர்கள் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக்கொள்வார்கள். மேலும் இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக செலுத்த  ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. 

    மேலும் மீனாட்சி - சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணத்தில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். 
     

    இதையும் படிங்க: குழந்தைகளை பகடை காய்களாக பயன்படுத்துவதா? - எதிர்பாராத இடத்தில் இருந்து விஜய்க்கு வந்த எச்சரிக்கை...!

    மேலும் படிங்க
    ரசிகர்களிடம் ஹைப்பை கிளப்பிய காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’..! படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் இதோ..!

    ரசிகர்களிடம் ஹைப்பை கிளப்பிய காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’..! படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் இதோ..!

    சினிமா
    இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

    இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

    இந்தியா
    “கருப்பா கூட வா” பாடல் கேட்க ரெடியா மக்களே..!! சூர்யாவின்

    “கருப்பா கூட வா” பாடல் கேட்க ரெடியா மக்களே..!! சூர்யாவின் 'கருப்பு' பட அடுத்த சிங்கிள் இன்று ரிலீஸ்..!

    சினிமா
    திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

    திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

    தமிழ்நாடு
    ஆபாசத்தை வெளிப்படுத்திய "சர்கே சர்கே சுனார் தேரி சர்கே" பாடல்..! தேசிய மகளிர் ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட சஞ்சய் தத்..!

    ஆபாசத்தை வெளிப்படுத்திய "சர்கே சர்கே சுனார் தேரி சர்கே" பாடல்..! தேசிய மகளிர் ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட சஞ்சய் தத்..!

    சினிமா
    மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!

    மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

    இந்தியா - நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!! ஜவுளி, விவசாயம், இறைச்சி ஏற்றுமதி என் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!

    இந்தியா
    திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

    திருச்செந்தூர் முருகனை தரிசிச்சாச்சு.. அடுத்து விஜய்யின் ஆன்மீக பயணம் எங்க தெரியுமா..??

    தமிழ்நாடு
    மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!

    மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..! பக்தர்களுக்கு தடபுடல் விருந்து..!

    தமிழ்நாடு
    பாக்., சீனா கைகோர்ப்பு!! 75 ஆண்டுகால தூதரக உறவு!!  கையெழுத்தானது 3 முக்கிய ஒப்பந்தங்கள்!!

    பாக்., சீனா கைகோர்ப்பு!! 75 ஆண்டுகால தூதரக உறவு!! கையெழுத்தானது 3 முக்கிய ஒப்பந்தங்கள்!!

    உலகம்

    "VINTAGE" பொருட்களை கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின்..! பழமையான கார்களுடன் புகைப்படம்..!

    தமிழ்நாடு
    பாக்., நல்ல நண்பன்தான்!! ஆனா.. மத்தியஸ்தம் பண்ண தகுதி இருக்கா?! அமெரிக்காவுக்கு சாதகமாக பேசுவதாக புகார்!

    பாக்., நல்ல நண்பன்தான்!! ஆனா.. மத்தியஸ்தம் பண்ண தகுதி இருக்கா?! அமெரிக்காவுக்கு சாதகமாக பேசுவதாக புகார்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share