பொதுத்துறை வங்கிகளை இணைக்கவோ, ஒருங்கிணைக்கவோ தற்போது எந்தத் திட்டமும் இல்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு முற்றிலும் முரணாக, இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரு மெகா இணைப்புத் திட்டம் நிதி அமைச்சகத்தின் கீழ் தற்போது ரகசியமாக உருவாக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.. இந்த அதிரடித் திட்டத்தின் கீழ், 2026-27 நிதியாண்டுக்குள் தற்போதுள்ள 12 பொதுத்துறை வங்கிகள் வெறும் 4 வங்கிகளாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாபெரும் இணைப்புத் திட்டத்தின் முக்கிய நோக்கம், வங்கிகளின் நிதிநிலையை வலுப்படுத்துவதும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதும் ஆகும். மேலும், உலக அளவில் போட்டியிடக்கூடிய பெரிய வங்கிகளை இந்தியாவில் உருவாக்குவதே இதன் தலையாய நோக்கமாகக் கருதப்படுகிறது. இந்த உச்சக்கட்ட சீர்திருத்தத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கி போன்ற முன்னணி வங்கிகள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா போன்ற நடுத்தர வங்கிகளைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கனரா வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவையும் ஒன்றாக இணைக்கப்பட்டு, இந்த நான்கு பெரிய வங்கிகளில் ஒன்றாக உருவாகும் என்று பிரத்யேக தகவல்கள் கசிந்துள்ளன. இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கியும் இதே குழுமத்தில் இணைக்கப்படலாம். இதன் மூலம், நாட்டின் நிதிச் சந்தையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா-யூனியன் வங்கி இணைப்பு ஆகிய நான்கு வங்கிகள் மட்டுமே இறுதியாக எஞ்சியிருக்கும். பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் நிலைப்பாடு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: ராஜ் பவனைத்தொடர்ந்து பெயர் மாற்றப்பட்ட பிரதமர் அலுவலகம்.. மத்திய அரசின் புதிய அறிவிப்பு!

இந்த இணைப்புத் திட்டம், இந்தியாவின் வளர்ந்து வரும் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் வங்கித் துறையைத் தயார்படுத்துவதற்கான ஒரு முக்கியப் காரணியாகக் உள்ளது. பெரிய மற்றும் வலுவான பொதுத்துறை வங்கிகள், சமீப காலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தனியார் வங்கிகளுடன் போட்டியிடுவதற்கும் சிறந்த நிலையில் இருக்கும் என்று அரசு நம்புகிறது. இந்த ஒருங்கிணைப்பு அமைப்புகள் மூலம் கிளைகளின் எண்ணிக்கையை முறைப்படுத்துவது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது மற்றும் மூலதனப் பயன்பாட்டை மேம்படுத்துவது போன்ற நிர்வாக நன்மைகளும் கிடைக்கும்.
முந்தைய 2017-20 காலகட்டத்தில் 27 பொதுத்துறை வங்கிகள் 12 வங்கிகளாகக் குறைக்கப்பட்ட நிலையில், இது இரண்டாவது பெரிய இணைப்புத் திட்டமாக அமையும். இந்த அதிரடித் திட்டம் முதலில் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அமைச்சரவை செயலகத்தின் மூத்த அதிகாரிகள், பிரதமர் அலுவலகம் மற்றும் செபி (SEBI) ஆகியவற்றின் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "Sanchar saathi" செயலிக்கு கிளம்பிய எதிர்ப்பு..!! திடீர் ட்விஸ்ட் அடித்த மத்திய அரசு..!!