விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் தேர் திருவிழா என்பது பக்தர்களுக்கு மிகவும் பிரசித்திபெற்ற ஒரு திருவிழா. இந்த ஆண்டு மாசி மாதத்தில் நடைபெறும் இந்தத் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் முழுவதற்கும் பிப்ரவரி 21-ஆம் தேதி சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா என்பது ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் மிகப்பெரிய விழாவாக இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் கூட மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

இந்தக் கோயிலில் அம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் விதம் சிறப்பு வாய்ந்தது. மாசி மாதத்தில் நடைபெறும் இந்தத் திருவிழாவில் திருத்தேர் ஊர்வலம் மிக முக்கியமான நிகழ்வு. தேர் இழுக்கும் போது ஏராளமான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்து, அம்மனின் அருளைப் பெறுவதற்காக ஆர்வத்துடன் கலந்துகொள்வார்கள். இந்த நிகழ்வு மாவட்டம் முழுவதும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்துவதால், அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கமாகிவிட்டது.
இதையும் படிங்க: தமிழகமே ஷாக்...!! “தலையை வெட்டி வீசுவோம்... குடும்பத்தையே அழிச்சிடுவோம்”... பாஜக முக்கிய நிர்வாகிக்கு ISIS கொலை மிரட்டல்....!
இந்த உள்ளூர் விடுமுறை அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். இதனால் பக்தர்கள் திருவிழாவில் தடையின்றி கலந்துகொள்ள முடியும் என்பதோடு, பொதுமக்களும் இந்த விழாவின் மகத்துவத்தை முழுமையாக அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக மேல்மலையனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் ஒரு நாளாக அமையும்.
இதையும் படிங்க: டைம் பாஸுக்கு கட்சி நடத்துறாரு சீமான்...! அதெல்லாம் கண்டுக்காதீங்க... தவெக நிர்மல் குமார் தாக்கு..!!