திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சகோதரர்கள் என்று தான் அழைப்பார்கள். இரு கட்சிக்கும் இடையில் உள்ள நல்லுறவை பிரதிபலிப்பதாக அவர் இருக்கிறது. இதனிடையே, விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர் இல்ல திருமண விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை ஏற்ற திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து உரையாற்றிய முதல் அமைச்சர் ஸ்டாலின், மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து ஸ்ரீ ராஜா சொக்கர் தொடர்பாகவும் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்பாகவும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

ராகுல் காந்தி என்னை அண்ணன் என்று தான் அழைப்பார் என்றும் திமுகவுக்கும் காங்கிரஸ்க்கும் இடையே கொள்கை உறவு இருப்பதாகவும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் தான் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது என்றும் கூறினார். சட்டமன்றத்தில் எப்படி பேச வேண்டும் எனக்கு பாடம் எடுத்தவர் சொக்கர் என்றும் கூறினார். அன்போடும் பாசத்தோடும் பண்போடும் பழகக் கூடியவர் சொக்கர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்னை பார்த்தாலே திமுகவுக்கு பயம்... கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வேல்முருகன்... ஸ்டாலினுக்கு நேரடி சவால்...!
ராகுல் காந்தியை தவிர யாரையும் தான் சகோதரர் என அழைத்ததில்லை என்றும் தனி நலனை விட நாட்டின் நலனே முக்கியம் என்பதால் காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கூட்டணி அமைத்து பயணித்து வருவதாக கூறினார். நாட்டின் ஒற்றுமைக்காக ஒரே அணையில் பயணிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவதூறு பரப்பும் அண்ணாமலை... அந்த எண்ணம் பலிக்காது! திருமாவளவன் திட்டவட்டம்...!