சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகம் மையத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிலேயே பெண்கள் அதிக அளவில் பணிக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். ஆண்களுக்கு இணையாக பெண்கள் அதிக அளவில் வெளியில் வரவேண்டும் என்றும் புதிய துறைகளில் பெண்கள் இணைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் பெண்கள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். பெண்கள் இந்த சமூகத்தின் முதுகெலும்பு என்றும் மக்கள் தொகையில் பாதுகாப்பு உள்ள பெண்கள் முன்னேறாவிட்டால் நாடு முன்னேறாது என்றும் குறிப்பிட்டு பேசினார். பெண்கள் தான் இந்த சமூகத்தின் முதுகெலும்பு என்றும் அதிகமாக பெண்கள் கல்லூரிக்கு செல்லும் மாநிலம் தமிழ்நாடு எனவும் கூறினார். பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி என்றும் தனது உரையின் போது முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.

மேலும் பெண்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களையும் பட்டியலிட்டார். பெண்களின் பாதுகாப்பிற்காக தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கி இருப்பதாகவும், இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்து இருப்பதாகவும் கூறியுள்ளார். ஒரு கோடியே 30 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் தங்களை பார்த்து பின்பற்றும் திட்டம் என்றும் பெண்களை முன்னேற்றுவதில் இருக்கும் அக்கறையை போல பெண்களின் உடல் நலனிலும் அக்கறை செலுத்தப்படுகிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! முன்னாள் ராணுவ வீரரை தட்டி தூக்கிய போலீஸ்..!
14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க எச் பி பி செலுத்த 36 கோடி ரூபாய் ஒதுக்கி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார். வளர்ந்து வரும் துறைகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் பெண்களின் பேருந்து பயணம் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார். இதுவரை மூன்று லட்சம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார். மார்பக புற்றுநோய் பிரத்யேக சிகிச்சைக்காக 120 கோடியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜக கேடுகெட்ட கட்சி..! EPS முரட்டு அடிமை..! திமுக மாநாட்டில் சாட்டையை சுழற்றிய உதயநிதி…!