79வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னை கோட்டை கொத்தனத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேருரை ஆற்றினார். அப்போது சுதந்திர போராட்டத்தில் தமிழர்கள் பங்கு அளப்பரியது என்று தெரிவித்தார். ஐந்தாவது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைக்க வாய்ப்பளித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் என நமது தலைவர்கள் கனவு கண்டதாகவும் சுதந்திர தினத்தில் முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் என்றும் தெரிவித்தார். அனைத்து தேசிய இன மக்களும் போராடி பெற்றது இந்த சுதந்திரம் என்றும் தமிழ்நாட்டில் தியாகிகளுக்கு மணிமண்டபங்கள் அமைத்தவர் திமுக ஆட்சி என்றும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: நாட்டின் 79 வது சுதந்திர தினம்...கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!
விடுதலை காற்றை சுவாசிக்க காரணமான தியாகிகளை போற்றுவோம் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 22,000 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 12000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் கூறினார்.

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்க முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால நிதி உதவி 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார். இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கான மாதாந்திர நிதி உதவி எட்டாயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்காக மாதவரத்தில் 22 கோடி தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவு படுத்தப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்லூரியில் பயிலும் போது திறனை மேம்படுத்தி வேலை வாய்ப்பு பெற புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும் கூறினார். ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு மையம், மண்டல அளவில் இரண்டு மையம், மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி பள்ளி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்ச ஸ்டாலின், வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக இல்லாமல் சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். தமிழகத்தில் வளர்ச்சி பல்துறை வளர்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்தார். ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றும் கட்டபொம்மன், விஜய ரகுநாதன் சேதுபதி, மருது சகோதரர்கள், வ.உ.சிதம்பரனார் வழித் தோன்றல்களுக்கான ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக ஒடுக்குமுறை மானக்கேடு முதல்வரே! இது பாசிச வெறியாட்டம்.. சீமான் கொந்தளிப்பு..!