இனிவரும் தேர்தல்களில் தனி சின்னத்தில் போட்டியிடுவது என்று மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. 2026ல் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது.
மனிதநேய மக்கள் கட்சி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் திமுக சின்னத்தில் போட்டிட்டு வெற்றி வென்றது. அப்போது மணப்பாறை மற்றும் பாபநாசம் இரண்டத்திலும் வெற்றி பெற்றார்கள். 2026 தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சியில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. நாகப்பட்டினம் மற்றும் மணப்பாறை தொகுதியில் போட்டியிட்ட நிலையில், நாகையில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மட்டும் வெற்றி பெற்றார். அதேசமயம் மணப்பாறையில் போட்டியிட்ட அப்துல் சமத் தோல்வி அடைந்திருந்தார்.
இதனிடையே,எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் சொந்த சின்னத்தில் போட்டிடுவோம் என்று ஒரு முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்கள். ஏனென்று தற்போது ஜவஹுல் எம்எல்ஏவாக இருந்தாலும் கூட அவர் சட்டமன்றத்தை பொறுத்தவரை திமுக எம்எல்ஏவாக கருதப்படுவார். இதனிடையே திமுக கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி முதலில் தவெகவிற்கு வெளியே இருந்து ஆதரவு தருவதாக அறிவித்தனர். காரணம் அவர்கள் இரண்டு தொகுதிகளிலும் தங்களது சொந்த சின்னத்திலேயே போட்டியிட்டு இருந்தனர். எனவே தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்த நிலையில், தற்போது அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஏ.எம்.ஷாஜகான் அமைச்சராக இன்று பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்படக்கூடும் எனக்கூறப்படுகிறது. அதேபோல் விசிகவின் பானை சின்னத்தில் போட்டியிட்ட வன்னியரசும் அமைச்சராகியுள்ளார்.
இதையும் படிங்க: என் வீட்டு தென்னை கூனி எதிர்வீட்டுக்கு இளநீர் தந்தால் பெயர் என்ன..? ஆ.ராசா வார்த்தைப் போர்..!
ஆனால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தனித்து முடிவெடுக்க முடியாத சூழ்நிலைக்கு மனிதநேய மக்கள் கட்சி தள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்ற நிலை உருவாகியுள்ள சமயத்தில், மனித நேய மக்கள் கட்சி இப்படியொரு முடிவை எடுத்துள்ளது. அதாவது மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள், நாமும் தனி சின்னத்தில் போட்டியிட்டால் இதுபோன்ற கஷ்டமான சூழ்நிலைகளில் தனித்து முடிவெடுக்க முடியும் என தலைமையை வலியுறுத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
ஏனென்று மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட காரணத்தால் தான் அவர்களால் எந்த முடிவும் தற்போது எடுக்க முடியவில்லை. சொந்த சின்னத்தில் போட்டியிடாமல் திமுக சின்னத்தில் போட்டியிட்டதால், வேற கட்சியை ஆதரித்தால் கட்சி தாவல் தடை சட்டம் அவர்கள் மீது பாயும் என்பதால் அவர்களுடைய எம்எல்ஏ பதவியை பறிக்கக்கூடிய ஒரு சூழல் ஏற்படுள்ளது.
இதையும் படிங்க: அமைதியா போறது.. அநாகரீகம் தவிர்க்க தான்..! ஆ. ராசாவை பூந்து விளாசிய S.S. பாலாஜி..!