இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதால் அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வரும் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் இறுதி கட்டமாக நியூசிலாந்து செல்லவுள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் நியூசிலாந்துக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்திய பிரதமர் நியூசிலாந்துக்கு வருவது வரலாற்று சிறப்புமிக்க தருணம். அவரை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி மாஸ்டர் ப்ளான்! அடுத்த வாரம் பயணம்! இந்தியா- நியூசிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம்!!
இந்தியா உலகின் மிகப் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்று என்றும், நியூசிலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்குதாரர் என்றும் லக்சன் சுட்டிக்காட்டினார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) கையெழுத்தானது இரு நாடுகளின் உறவை புதிய உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம் அதிக வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த லக்சன், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றார்.
பிரதமர் மோடியின் இந்தப் பயணம் இந்தியாவுடனான நியூசிலாந்தின் உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு நியூசிலாந்து செல்லும் மோடி, அங்கு உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பார்.
இந்தப் பயணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியமான அங்கமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கும் வாய்ப்பாகவும் இது கருதப்படுகிறது.
இதையும் படிங்க: "குதிரை பேரம்"..! ஆளுநரை சந்திக்கும் திமுக..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!