முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பெயரை மாற்றி பெருத்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் - 4 பல்புகள் 1 பேன் ரூ.33 ஆயிரம் பில்லா ஆய்வில் அதிர்ச்சியடைந்த தவெக எம்.எல்.ஏ.கருப்பையா. சமையல் கூடம் மராமத்து பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் ஆய்வில் அம்பலமானது
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான காலை உணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் அதனை விரிவுபடுத்தி திட்டத்தினை தமிழக முதல்வர் வருகின்ற 22ம் தேதிபெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ - மாணவியருக்கு சமையல் செய்து வழங்கிட சமையல் கூடங்கள் விரிவாக்கம் செய்யவும் புதுப்பிக்கவும் தமிழக அரசு நிதி ஒதுக்கியது.
இதையும் படிங்க: மக்கள் தயவில்தான் தவெக ஆட்சி! மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!
இந்த நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தேவசேரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்திற்குள் உள்ள சமையல் கூடம் ரூ.33 ஆயிரத்திற்கு புதுப்பித்ததாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.
அங்கு திடீர் ஆய்வு பணிக்கு சென்ற தவெக MLA கருப்பையா அதிர்ச்சியடைந்தார். அதிகாரிகள் 4 லைட்டுகள், ஃபேன் ஆகியவற்றை மட்டும் புதியதாக அமைத்து அதற்கு பில்லாக ரூ.33 ஆயிரம் நிதியை முறைகேடாக எடுத்துள்ளது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியான MLA கருப்பையா இந்த நாலு டைட்டுக்கு இவ்வளவு Bill ஆ என அதிர்ச்சியடைந்து ஏதாவது பிரச்சனை என்றால் நீங்கள் தான் மாட்டிக் கொள்வீர்கள் என எச்சரித்து அங்கிருந்து சென்றார்.
இந்த நிலையில் 4 டியூப் லைட் , ஒரு பேனுக்கு ரூ.33 ஆயிரமா என அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதே போல் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்க பணி என கூறி 19 மையங்களில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு அரசு நிதியான ரூ.10 லட்சத்து 63 ஆயிரத்து 500 ரூபாய் அரசு நிதியை முறைகேடாக அதிகாரிகள் பெற்றுள்ளதாக குற்ற சாட்டு எழுந்துள்ளது
எனவே முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து 20 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வர ரெடி! தாராபுரத்தில் செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!