தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அவசியமான பல திட்டங்கள் தமிழக அரசால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாகவும், இதற்கு அரசியல் பழிவாங்கல் மனோபாவமே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனக்கு வாக்களித்தவர்கள் வருந்தாதவாறும், வாக்களிக்காதவர்கள் தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தும் வகையிலும் எனது பணி இருக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதை அன்புமணி விமர்சித்தார். இந்தப் பேச்சு வெறும் வசனமாகவே உள்ளது என்றும், தர்மபுரி மாவட்டத்தின் மீது அரசு வன்மம் கொண்டு, வளர்ச்சித் திட்டங்களை வேண்டுமென்றே முடக்கி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் தர்மபுரி மாவட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், தர்மபுரியை முதலமைச்சர் புறக்கணிப்பதாக கூறிய அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். தர்மபுரியை புறக்கணித்து இருந்தால் மக்களவையில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும் என்று கேள்வி எழுப்பினார். தர்மபுரிக்கு தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலுக்கு அன்புமணிக்கு அமைச்சர் பதிலளித்தார். நாடாளுமன்றத்திற்கு போய் அன்புமணி சாதித்தது என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கிட்னி முறைகேடு..! இதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா? மா.சு.வுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!
மாநில அரசு விமர்சிக்கும் அன்புமணி என்றைக்காவது மத்திய அரசு விமர்சித்தது உண்டா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய பட்ஜெட் பற்று என்றைக்காவது பேசியிருக்கிறாரா என்ற கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டு அரசியலில் தன் கட்சி இடமில்லாமல் கண்ணாடி கொண்டிருக்கும் நிலையில் இனிமேலாவது அன்பு மணி புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று சாடினார்.
இதையும் படிங்க: என் சம்பந்தி வீட்டுல ரெய்டா? அமைச்சர் நேருவுக்கு இபிஎஸ் பதிலடி...