அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதனை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி ரத்தின கம்பளம் விரிக்கவில்லை., பாஜகவின் பாசிச ரத்தக்கம்பலத்தை விரித்துள்ளார் என்பதை தோழமைக் கட்சிகள் மற்றும் மக்கள் அறிவார்கள் என்றும் கூட்டணி ஆட்சி என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்லிக் கொண்டிருக்கும் அமித்ஷாவிற்கு பதிலடி தர முடியாத கோழை பழனிசாமி என்றும் அமைச்சர் கே என் நேரு விமர்சனம் செய்தார். ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை அரங்கேற்றி நெட்டிசன்களுக்கு ட்ரோல் மெட்டிரியல் ஆகிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பைத் தயவு செய்து மாற்றிவிடுங்கள் பழனிசாமி அவர்களே.’சம்பந்தியை மீட்டோம், சம்பாதித்த பணத்தைக் காப்போம், மக்களை மறப்போம்; தமிழ்நாட்டை விற்போம்!’, மகனைக் காப்போம், சம்பந்தியை மீட்போம் எனத் தலைப்பை மாற்றிக் கொண்டு பழனிசாமி பாஜக அடிமை பயணத்தைத் தொடங்கலாம் என்று கூறியிருந்தார்.

பாஜக கூட்டணியை விட்டு விலகுவது போல 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, கூட்டணிக் கட்சிகளை அதிமுகவில் சேர்க்க முயன்றார் பழனிசாமி என்று விமர்சித்தார். திமுக கூட்டணிக் கட்சிகளை விமர்சிக்கும் பழனிசாமி, என்றைக்காவது பாஜகவை விமர்சித்திருக்கிறாரா என்றும் கூட்டணி ஆட்சி என்று மூச்சுக்கு முப்பது தடவை சொல்லிக் கொண்டிருக்கும் அமித்ஷாவிற்கு பதிலடி தர முடியாத கோழை பழனிசாமி திமுக கூட்டணிக் கட்சிகளைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா எனவும் சாடி இருந்தார்.
இதையும் படிங்க: அட்ரா சக்க! பசுமை வீடு, மா தொழிற்சாலை....மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட இபிஎஸ்!
இந்த நிலையில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தின் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டியில் மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது, தனது சம்பந்தி வீட்டில் ரெய்டே நடக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள் என்றும் உங்கள் வீட்டிலும் உங்களது தம்பி வீட்டிலும் தான் வருமானவரித்துறை ரெய்டு நடந்ததாகவும் அமைச்சர் நேருவுக்கு பதிலடி கொடுத்தார். சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே போனவர் நீங்கள்தான் என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: சீப்பை ஒளிச்சா கல்யாணம் நிக்குமா? இபிஎஸ் போஸ்டர்கள் அகற்றப்பட்டதற்கு அதிமுக கடும் கண்டனம்..!