தமிழகம் எவ்வளவு வேகமாக வளர்ச்சியை நோக்கி சென்றாலும், சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து வந்தாலும், ஆணவப்படுகொலைகள் என்பது பெரும் கரும்புள்ளியாகவே இருந்து வருகிறது. பல்வேறு இடங்களில் நடக்கும் ஆணவக் கொலைகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் தாலுகாவில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு மயிலோடை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தனது குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம், முதலில் தற்கொலை என்று தெரிவிக்கப்பட்டு பின்னர் ஆணவக்கொலையாக வெளிப்பட்டது.

செல்வம் என்பவரின் மகள் கடந்த மூன்று வருடங்களாக சேலத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற இளைஞரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இந்தக் காதல் விவகாரம் இரண்டு வருடங்களுக்கு முன்பே குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அபிசெல்வியின் அண்ணன் மற்றும் பெற்றோர் இந்தக் காதலை கடுமையாக எதிர்த்தாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் அதிரடி முடிவு! தனியாருக்கு மாறும் டாஸ்மாக்?! முதற்கட்ட பேச்சுவார்த்தை துவக்கம்!?
இந்தச் சம்பவத்தால் கோபமடைந்த ஏன் பெண் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது. கயத்தார் போலீசார் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். ஆனால், தொடர்ந்த விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இளம்பெண்ணை அவரது அண்ணன் சிவஞானம் கொலை செய்ததும், அதற்கு தாய் எஸ்தர் பாலின் உடந்தை இருந்ததும் வெளியானது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் தான் சொந்த சகோதரியை தாயின் உதவியோடு ஆணவக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அசெம்பிளில கவனிச்சிக்குறேன்! உதயநிதி ஸ்டாலின் ஸ்கெட்ச்! சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி!