சென்னை மயிலாப்பூரில் இன்று கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் ஏற்பாட்டில் நடந்த இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கிராமப்புற திருக்கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் முக்கியமான திட்டங்களை அறிவித்து தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், ஆதீன பெருமக்கள், சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், அரசு நிர்வாகக் கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு சமூக மற்றும் நிதி பாதுகாப்பு அளிப்பதோடு, கோயில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதும், பாரம்பரியத்தை பாதுகாப்பதும் ஆகும். முதலமைச்சர் ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்து, பூசாரிகளுக்கு நல உதவிகளை வழங்கினார்.

பூசாரிகளின் நலனுக்காக 11 புதிய முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராம பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆண்டுதோறும் 500 பூசாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக மேல ஓபிஎஸ்- க்கு நம்பிக்கை... அதான் வந்துட்டாரு..!! MP கனிமொழி பேட்டி.!!
பூசாரிகள் மரணமடைந்தால் வழங்கப்படும் வாரிசுதாரர் தொகை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார். பூசாரிகளின் மகள், மகனுக்கு வழங்கப்படும் கல்வி நிதி உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இயற்கை எய்தும் கிராம பூசாரிகளின் ஈம சடங்கிற்கான தொகை 10,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். கிராம கோவில் பூசாரிகளுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு 1.25 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... அதிமுகவை கழட்டிவிடும் கட்சிகள்..!! SDPI திமுகவுடன் கூட்டணி..!!