ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துவிட்டார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்வு, தமிழக அரசியல் களத்தை முற்றிலும் புரட்டிப்போட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே சில அறிகுறிகள் தெரிந்தன. ஓ.பி.எஸ். அண்ணா அறிவாலயத்திற்கு அருகில் இருந்த சட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலினைச் சந்தித்தபோது, "திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வலுவான வாய்ப்பு உள்ளது" என்று அவர் பகிரங்கமாகக் கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
அதன் பிறகு அவரது ஆதரவாளர்கள் சிலர் திமுகவில் இணைந்தனர். அதிமுகவை ஒன்றிணைப்பேன் என கூறிவந்த ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவை தன்னை இணைத்துக் கொண்டார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. ஓபிஎஸ் எடுத்திருப்பது தவறான முடிவு என்று கருதி வருகின்றனர்.

இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கை விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருப்பதாகவும் இன்னும் பத்து நாட்களுக்கும் முதலமைச்சரின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... அதிமுகவை கழட்டிவிடும் கட்சிகள்..!! SDPI திமுகவுடன் கூட்டணி..!!
முதல்வர் ஸ்டாலின் மீதான நம்பிக்கையாலும் திமுக மீது இருக்கும் நம்பிக்கையால் தான் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்திருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் யார் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மையான திராவிட ஆட்சி யாரால் நடைபெறுகிறது என்பது தெரிய வருவதாக கூறினார்.
இதையும் படிங்க: திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!