திமுக அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டு பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகிறார். தற்போது பல கேள்விகளை திமுக அரசுக்கு எழுப்பி உள்ளார்.
தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 354-ல் திமுக சொன்னதாகவும் அதனை செய்தீர்களா எனவும் முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இரண்டு மாதத்திற்கு முன் தாம்பரம் அரசு மருத்துவமனையை நான் தான் தொடங்கி வைத்துவிட்டேனே என்று கூற வேண்டாம் என்றும் ஆட்சி முடியும் தருவாயில், 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டதாக விளம்பரப்படுத்தப்படும் அம்மருத்துவனையில் குடிநீர் வசதி, கழிவறை வசதி கூட இல்லை என்பது தான் நிதர்சனம் என்று தெரிவித்தார். சோழிங்கநல்லூர், மதுரவாயல் ஆகிய மற்ற இரண்டு பகுதிகளிலோ மருத்துவமனை கட்ட செங்கலைக் கூட திமுக அரசு நாட்டவில்லை என்றும் அதைச் செய்யவும் திமுக அரசுக்கு நாட்டமில்லை என்பதும் நிதர்சனம் எனவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: மிஸ் ஆகக் கூடாது... மக்கள் SAFETY தான் முக்கியம்... துறை சார்ந்த அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை...!
கொடுத்த வாக்குறுதிப்படி அரசு மருத்துவமனைகளை உருவாக்காது, நான்கரை ஆண்டு காலமாக ஏழை மக்களின் உடல் நலனைக் கிடப்பில் போடுவது தான் உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பா என்று கேள்வி எழுப்பினார்.வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்று விளம்பர உலகில் மட்டும் உழன்று வரும் திமுக அரசின் அகங்காரம் மக்களின் கோபத்தீயில் சாம்பலாகும் நாள் வெகுதூரமில்லை எனவும் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு அருகதை இல்ல! அவர் ஆட்சியில கால் கூட தரையில படல... பந்தாடிய அமைச்சர் சேகர்பாபு...!