முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன் என்றும் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் காணொளிகள் காட்டுவதாகவும், கத்தியால் குத்தப்பட்டதாகவும் சிலர் கூறிய நிலையில், இவற்றைத் தாண்டி கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என்ன என்றும் கேட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள், வேங்கைவயல் விவகாரம், மெரினா விமான சாகச நிகழ்வில் கூட்ட நெரிசல் மரணங்கள், 25 லாக்-அப் மரணங்கள் போன்றவற்றுக்கு எல்லாம் செல்லாத முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூரில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்துவது ஏன் என்றும்
திமுகவினரின் உணர்ச்சிப்பூர்வ நாடகத்தால் சந்தேகமடைந்துள்ள கோடிக்கணக்கான மக்களில் தானும் ஒருவன் என்று கூறினார். கூட்ட நெரிசலுக்குப் பிறகு, உண்மையை மறைக்க திமுக அரசு இவ்வளவு அசாதாரண அவசரத்துடன் செயல்பட்டது ஏன் என்றும் 25 பேர் மீது வழக்கு பதிந்து, பத்திரிகையாளர் பெலிக்ஸ் உட்பட நான்கு பேரைக் கைது செய்து, மக்கள் மத்தியில் எழும் அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏன் இவ்வளவு விரைவாகத் திமுக அரசு முடக்குகிறது என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆடுங்க இன்னும் 6 மாசம் தான்... திமுக அராஜகத்திற்கு பெரிய DOT...! அண்ணாமலை உறுதி...!

காவல்துறை கூட்டத்தைச் சரியாக மதிப்பிடாதது ஏன் என்றும் விஜய் தாமதமாக வருவதனால் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை என்றும் கேட்டார்.
உண்மையிலேயே எத்தனை காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்., பெரும் அரசியல் பேரணி நடக்கும் வேளையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கரூரில் இல்லாதது ஏன்? எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சரமாரி கேள்விகளை முன் வைத்தார். இதில் ஏதேனும் உண்மைகள் புதைந்திருந்தால் அவை அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சமா என்றும் அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பே, கருத்துகளை விசாரணை ஆணையத் தலைவர் வெளியிடுவது ஏன் என்றும்
விசாரணை நடக்கும்போதே பொது அறிக்கைகளை வெளியிட வருவாய் செயலாளருக்கு அதிகாரம் அளித்தது யார்., அஜித்குமார் லாக்-அப் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய திமுக அரசு, கரூர் வழக்கை ஒப்படைக்கத் தயங்குவது ஏன் என 12 கேள்விகளை நயினார் நாகேந்திரன் முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: விளம்பரத்திற்காக விஜயோடு சண்டை! தி. மலை சம்பவம் கண்ணுக்கு தெரிலையா? விளாசிய காயத்ரி ரகுராம்...!