திமுக அரசின் அடுத்த ஊழல் வெளிவந்து இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். வரும் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படாத நிலையில், முன்கூட்டியே மாநில நெடுஞ்சாலை துறைக்கு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கி, திமுக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் நாளொன்றுக்கு சராசரியாக 40 டெண்டர்களை வெளியிட்டு, 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க அவசரகதியில் செயல்பட்டுக் கொண்டிருப்பது பல சந்தேகங்களைக் கிளப்புகிறது என்றும் கூறினார்.

வழக்கமாக அரசு டெண்டர்களை வெளியிட பல மாதங்களாகும் நிலையில், என்றும் இல்லாத சாதனையாக நெடுஞ்சாலை துறைக்கான டெண்டருக்கு மூன்றே நாட்களில் அரசாணை வெளியிடுவதும், பிப்ரவரி மாதத்தில் மட்டுமே சென்னை பெருநகர மாநகராட்சி 248 டெண்டர்களை வெளியிட்டிருப்பதும் எப்படி சாத்தியமாகியது என்று நயினார் கேள்வி எழுப்பினார். இவையெல்லாம் தேர்தலுக்கு முன் கமிஷன் கல்லா கட்ட திமுக அரசின் தந்திரமா என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: “இபிஎஸ் தான் முதல்வர் ஆனா...” - NDA கூட்டணிக்குள் குண்டு வைத்த நயினார்... அமைச்சரவைக்கு காத்திருக்கும் ஆப்பு...!
நான்கரை ஆண்டுகளாக தமிழக மக்களின் வரிப்பணத்தை சுரண்டித் தின்று கொழுத்தது போதாமல், எஞ்சிய ஓரிரு மாதங்களிலும் மொத்தமாக கமிஷன் அடித்து, வாரி சுருட்டிக்கொள்ள திமுக அரசு திட்டமிடுவது என்றும் நிறைவேறாது என்றார். உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, கமிஷன் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டி, விரைவில் ஊழல் மாளிகையான திமுகவிற்கு ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் பூட்டு போடுவார்கள் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக கள்ளிச்செடி களையெடுக்கப்படும்...! நயினார் திட்டவட்டம்... விவசாயிகள் கண்ணீரை முதல்வர் வேடிக்கை பார்ப்பதாக சாடல்..!