கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நிகழ்ந்த அதிர்ச்சி தரும் சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிய உணவு நேரத்தில் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவை சாப்பிட்ட பல மாணவ மாணவிகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்தப் பள்ளியில் சுமார் 380 முதல் 400 வரை மாணவர்கள் பயில்கின்றனர்.
வழக்கம்போல் மதிய உணவு தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டது. உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, குறிப்பாக நான்காம் வகுப்பு உள்ளிட்ட சில வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றின. இதனால் பள்ளியில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் ஆய்வு செய்தபோது, மதிய உணவில் பல்லி விழுந்திருந்தது தெரியவந்தது.

மதிய உணவின் தரத்தைக் கூட உறுதி செய்ய இயலாத போலி சமூகநீதி மாடல் அரசு என திமுகவை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில், பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போலி சமூக நீதி மாடல் அரசின் கோர முகத்தை மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!
மேடைகளில் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என நாடகமாடிவிட்டு, நிதர்சனத்தில் புழு, பூச்சி, பல்லி கிடக்கும் தரமற்ற சத்துணவை வழங்கி அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குழந்தைகளின் உயிர்களோடு விளையாடும் திமுக அரசு தமிழகத்தின் மிகப்பெரும் சாபக்கேடு என்று தெரிவித்து உள்ளார். குழந்தைகளின் உணவின் தரத்தைக் கூட உறுதி செய்ய இயலாத கேவலப்பட்ட ஆட்சியை நடத்திக் கொண்டு, "அப்பா" என்னும் பட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆசைப்படுவதெல்லாம் மிகப்பெரும் வெட்கக்கேடு என்று சாடியுள்ளார்
.
இதையும் படிங்க: பிணவறையிலும் அலட்சியம்... நிர்வாக சீர்கேடு..! திமுகவை விளாசிய தவெக..!!