தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக TRB என்ற அமைப்பு செயல்படுகிறது. இது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பு. பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி உதவி பேராசிரியர் வரை பல்வேறு நிலைகளில் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு TRB தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகள் பெரும்பாலும் போட்டித்தன்மை மிக்கவை, ஏனென்றால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆசிரியர் பணியை கனவாகக் கொண்டிருக்கிறார்கள்.
இளநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவிக்கு இது நடத்தப்படுகிறது. 2025-இல் சுமார் 1996 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி, தேர்வு செப்டம்பர் 28 அன்று நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, பொருளியல் போன்ற பாடங்களுக்கு தனித்தனியே காலியிடங்கள் இருக்கும்.
TET தேர்வு, பட்டதாரி ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. குழப்பம் நிறைந்த தேர்வு அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டை எழுந்துள்ளது. காலி பணியிடங்களை குறிப்பிடாமல் அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஷாக்க கொர..! சிங்கத்தைப் பார்த்து சிறு நரிகளுக்கு அல்லு.! அலறுது அறிவாலயம்.. விளாசிய நயினார்..!

காலிப்பணியிடங்களை நிரப்புவதில் மட்டுமல்ல, குறிப்பிடுவதிலும் அக்கறையில்லாமல் திமுக அரசு செயல்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு அட்டவணையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைக் கூட குறிப்பிடாமல் கண் துடைப்புக்காக ஒரு அறிக்கையைத் திமுக அரசு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வுகளை முறையாக நடத்துவதில்லை என்றும் 2011-க்கு முன்னர் பணியில் இணைந்த ஆசிரியர்களுக்குச் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தவில்லை, இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்குவதில்லை, பகுதி நேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்வதில்லை என நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்கள் நலனை வதைத்த திமுக அரசு, ஆட்சி முடியும் தருவாயில், ஒரு படி மேலே சென்று தேர்வு அட்டவணையை வெளியிடுவதிலேயே மெத்தனமாக செயல்பட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.
கல்வித்துறையின் அச்சாணியான ஆசிரியப் பணியிடங்களை நிரப்புவதில் அக்கறையின்றி செயல்பட்டு, கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை கல்வியில் சீரழிந்த தமிழ்நாடாக மாற்றிவரும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: கஞ்சா தமிழகம்... சீரழியும் சமூகம்..! மீண்டும் உங்கள் ஆட்சியா? நயினார் கண்டனம்..!