நாமக்கல் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்வாக அலுவலரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். வீடு புகுந்து தலைமுடியைப் பிடித்து இழுத்து நெஞ்சில் மிதித்து மணல் கடத்தல்காரர்கள் தாக்கியதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
தனது பணியைத் தயங்காது நேர்மையுடன் ஆற்றிய அதிகாரியை தாக்குதல் நடத்தியதுடன், இதற்கு மேலும் கடத்தலைத் தடுக்க முயற்சித்தால் வண்டியை ஏற்றிக் கொலை செய்துவிடுவதாக மணல் கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது இம்மியளவும் இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்துவதாக குற்றம் சாட்டினார்

சட்டவிரோத மணல் கடத்தலைக் குறித்து புகார் அளித்தவர்களையும், அதைத் தடுக்கும் அதிகாரிகளையும் தாக்கும் சம்பவம் இது ஒன்றும் முதல்முறை அல்ல என்றும் அதிலும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே கரூரைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், திமுக ஆட்சி அமைந்ததும் மணல் அள்ளலாம் என அச்சாரமிட்டதை ஒப்பிட்டுப் பார்த்தால் தொடர்ந்து மணல் கடத்தல் மாஃபியாக்களுக்கு திராவிட மாடல் அரசே ஒத்துழைப்பு நல்குகிறதோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...!
குற்றவாளிகளிடமிருந்து அரசு அதிகாரிக்கே பாதுகாப்பு வழங்க இயலாத திமுக அரசு எளிய பின்புலம் கொண்ட பொதுமக்களை எப்படி பாதுகாக்கும் என்றும் சுற்றுச்சூழலை எப்படிக் காக்கும் எனவும் கேள்வி எழுப்பினார். இந்த லட்சணத்தில் இருந்து கொண்டு நாடு போற்றும் நாலாண்டு என்று நாகூசாது மக்கள் வரிப்பணத்தில் நாலாபக்கமும் விளம்பர நாடகம் போடுவது வெட்கக்கேடு என்றும் சாடினார்.
இதையும் படிங்க: துணை ஜனாதிபதி தேர்தல்... இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல்..!