கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, 3 இளைஞர்கள் அவரை தாக்கி, மாணவியை வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அடித்து விரட்டப்பட்ட நிலையில், ஆண் நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பீளமேடு போலீசார் மாணவியை மீட்டனர். 
மாணவியை கூட்டுப்பாலில் கொடுமை செய்து தப்பி ஓடிய மூவரை பீளமேடு காவல்துறை இடத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தப்பியோடிய 3 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் பற்றிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்கள் வேட்டையாடப்படுவதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் ராகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோவையில் பாஜக சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார். தமிழ்நாட்டில் நடைபெறும் குற்ற செயல்கள் குறித்து முதலமைச்சர் விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: வேட்டையாடப்படும் பெண்கள்! கம்பி சுற்றும் முதல்வர்... இதான் நல்லாட்சி லட்சணமா? நயினார் சாடல்...!
கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது சாதாரண சம்பவம் அல்ல என்றும் இது குறித்து முதல்வர் பேசாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். நாளை மறுநாள் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறிய அவர், தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல என்றும் பாலியல் மாடல் ஆட்சி எனவும் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார். 
இதையும் படிங்க: பாஜகவின் பாதம்தாங்கி பழனிச்சாமி... தமிழ்நாட்டில் பேச மோடிக்கு தைரியம் இருக்கா? முதல்வர் ஸ்டாலின் விளாசல்...!