நீட் தேர்வு அடிப்படையில் அநீதியானது என்றும், பா.ஜ.க-வைத் தவிரத் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை ஒரே குரலில் எதிர்ப்பதாகவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் போராடி வரும் சூழலில், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி #ScrapNEET என்ற ஹேஷ்டேக்குடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில்

நீதியையும் நீட் தேர்வையும் ஒருசேரக் கொண்டு செல்ல முடியாது; நீட் என்பது அடிப்படையில் நியாயமற்ற ஒரு தேர்வு. மற்ற மாநிலங்களைப் பற்றி என்னால் பேச முடியாது, ஆனால் தமிழ்நாட்டின் குரலாக என்னால் உறுதியாகப் பேச முடியும். பா.ஜ.க-வைத் தவிரத் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை முழுமையாக எதிரிக்கின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் நீட் விலக்கு கோரி பலமுறை தீர்மானங்களும் மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மாநில உரிமைகளை தொட்டால் விடமாட்டோம்! புதிய சட்டங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!
நியாயப்படுத்த முடியாத ஒரு தேர்வை மீண்டும் மீண்டும் ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். நீட் தேர்வை உடனடியாக முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். மேலும், நீட் தேர்வு ஏன் அடிப்படையில் அநீதியானது, அது ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்பது குறித்துத் தாம் விரிவாக எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை நாளை வெளியாகவுள்ள தி இந்து ஆங்கில நாளிதழில் இடம்பெறும் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக மறுசீரமைப்பு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!