நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே காதலிப்பதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருமளவு அதிகரித்து இருப்பது பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வயது வித்தியாசம் பாராமல் நடக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இரண்டு மாத குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதனால் தான் பல குற்றங்கள் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சிக்கு செல்லும் இடம் இது போன்று மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. சிறிய குழந்தை முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: நெல்லைக்கு செல்ல டிக்கெட் இல்லையா? நாளை எழும்பூரில் இருந்து முன்பதிவில்லாத மெமு ரயில் இயக்கம்!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கடந்த 2019ம் ஆண்டு காதலிப்பதாகக் கூறி 13 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 30 வயதான ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.மேலும் குற்றவாளிக்கு ரூ.6000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கவும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க: நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!