திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் ரிதன்யா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனுடைய இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவானது இன்று திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவின் மீது இடைக்கால மனு தாக்கல் செய்த ரிதன்யா தரப்பு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கோரியுள்ளனர்.

இதுகுறித்து, ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சம்பவத்தில் கைது செய்த சில நாட்களிலேயே ஜாமீன் கூறி எதிர்த்தரப்பினர் மனுதாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கூடாது என பெற்றோர் தரப்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அது நாளைக்கு விசாரணைக்கு வரும். வழக்கு விசாரணையில் நிறைய தொய்வு இருக்கிறது. தற்கொலை குறிப்பில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: தொண்டையில் சிக்கிய ரம்புட்டான் விதை... குடும்பத்தினர் கண் முன்பே துடிதுடித்து பலியான 5 வயது சிறுவன்...!

முதல் தகவல் அறிக்கை மாற்றப்பட்டதாக சொல்கிறார்கள். மாற்றப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் செல்போனில் பேசிய வாக்குமூலங்கள் பதிவு ஆகவில்லை. காவல்துறை வழக்கு விசாரணையை மட்டுப்படுத்துகிறது. மூன்றாவது குற்றவாளியை ( கணவனின் தாயை சித்ராதேவி) போலீஸ் அழைத்து சென்று விடுவித்ததாக சொல்கிறார்கள். மூன்றாவது குற்றவாளியை கஸ்டடி எடுத்து விசாரித்தால் தான் முழு விவரம் தெரியவரும். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம்.

புகார்தாரர் கொடுக்கும் முழு விவரங்களை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது. வரதட்சணை கொடுமை நடந்து இருக்கிறது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை சரியாக நடக்கவில்லை என புகார்தாரர் கருதுகிறார். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வலியுறுத்தி நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மழையில் நடந்த பயங்கரம்... மின்சாரம் பாய்ந்து + 2 மாணவன் பலி... சென்னையில் மீண்டும் பரபரப்பு...!