நெல்லை மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெரு பகுதியைச் சேர்ந்தவர் நிஜாம் வயது 35. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ரியாஸ் என்கிற மகன் இருந்துள்ளார். சிறுவனும் அவரது தாயரும் நிஜாமின் தாய் தந்தையுடன் சேர்ந்து மேலப்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு ரியாசின் தாத்தா, பாட்டி கடைவீதிக்குச் சென்று ரம்புட்டான் என்று சொல்லக்கூடிய பழத்தை வாங்கி வந்துள்ளனர். தொடர்ந்து வீட்டில் இருந்த சிறுவன் ரியாஸ் இடம் அந்த பழத்தை அவர்கள் வழங்கிய போது சிறுவனும் ஆசையோடு ரம்புட்டான் பழத்தின் விதையோடு பழத்தை விழுங்கியுள்ளார்.
இதையும் படிங்க: மழையில் நடந்த பயங்கரம்... மின்சாரம் பாய்ந்து + 2 மாணவன் பலி... சென்னையில் மீண்டும் பரபரப்பு...!

சிறிது நேரத்தில் அந்த பழத்தில் இருந்த விதை சிறுவனின் தொண்டையில் சிக்கியது. இதில் மூச்சுத் திணறிய சிறுவனை அவரது குடும்பத்தினர் மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்த டாக்டர்கள் சிறுவனை பரிசோதித்தபோது சிறுவன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: யார் அடுத்த தலாய் லாமா? மூக்கை நுழைக்கும் சீனா.. முட்டி மோதும் அறக்கட்டளை..!