தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-இன் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 அன்று, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான அனீஸ் பாத்திமா என்ற 25 வயது பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். வாக்குப்பதிவு நடைபெறும் போது, அம்மாபேட்டை அருகிலுள்ள ஒரு வாக்குச்சாவடியில் அவர் மீது தாக்குதல் நடைபெற்றதாக அவரது கணவர் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவத்தின் விவரங்களின்படி, நாம் தமிழர் கட்சியின் பூத் ஏஜெண்டுகளுக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் விரைவில் உடல் ரீதியான மோதலாக மாறியது. இந்த மோதலின்போது, அனீஸ் பாத்திமாவை தி.மு.க.வினர் தள்ளிவிட்டதாகவும், அவர் கீழே விழுந்ததாகவும், பின்னர் செங்கற்களால் தாக்கியதாகவும் அவரது கணவர் தெரிவித்தார். தாக்குதலுக்குப் பிறகு அனீஸ் பாத்திமா மயக்கமடைந்த நிலையில், தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சம்பவம் தேர்தல் நாளின் இறுதி நேரத்தில், வாக்குப்பதிவு முடியும் சமயத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சியின் தரப்பில் இந்தத் தாக்குதலை “மிருகத்தனமான அராஜகம்” என்று வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கர்ப்பிணிப் பெண்ணை ஒரு வேட்பாளராக மட்டுமல்லாமல், ஒரு தாயாகவும் பாராமல் தாக்கியது அரசியல் ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கட்சியினர் விமர்சித்தனர்.
இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியான நாதக வேட்பாளர் மீது தாக்குதல்..! வலுக்கும் கண்டனங்கள்..!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கர்ப்பிணி வேட்பாளர் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட திமுகவினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தவறும் பட்சத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் அனீஸ் பாத்திமாவிற்கு நிகழ்ந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாபேட்டை காவல் நிலையம் எதிரே ஏப்ரல் 15 ஆம் தேதியான இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரச்சாரம் ஓய்ந்தும் வாக்குச் சேகரிப்பு..! சீமான் மீது புகார்..! வழக்குப்பதிவு..!