பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மக்கள் வாக்குகள் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். இதற்கு தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்ததோடு திட்டவட்டமாக பீகார் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.
இதை அடுத்து பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சம் பேரின் வாக்குகள் பறிபோனதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து 65 லட்சம் பேரின் விபரங்களை முழு தகவலோடு வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. தரவுகளை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட கெடு விதிக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க வாக்குத்திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதற்கு தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: வாக்குத் திருட்டு! வார்த்தைப் போர்... தலைமை தேர்தல் ஆணையர் பாஜக உறுப்பினரா?
பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பான பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில் அடுத்த மாதம் முதல் ஒடிசாவிலும் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஒடிசாவில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரட்டும்... தேர்தல் ஆணையத்துக்கு அப்ப இருக்கு கச்சேரி! ராகுல் காந்தி திட்ட வட்டம்