மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து நேற்று இரவு 10 மணி அளவில் தனியார் ஆம்னி பேருந்து 40 பயணிகளுடன் பெங்களூர் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது
இன்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராயக்கோட்டை அருகே கருக்கன அள்ளி என்ற பகுதியில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அருகே உள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்
உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் ராயக்கோட்டை போலீசார் அடிபட்டவர்களை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மற்றும் ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, பெரும்பாலும் கை கால் தலை பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது
இதையும் படிங்க: வரலாறு காணாத மழையால் முடங்கியது மும்பை!! 100 ஆண்டுகால சாதனை முறியடிப்பு!! 8 மணிநேரத்தில் 177 மி.மீ. மழை!!
கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன நெரிச்சல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதால் தற்போது நான்கு வழி ராயக்கோட்டை சாலையில் வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுகிறது அந்த சாலையும் முழுமை அடையாததால் ஆங்காங்கே வாகனங்கள் ஒரு வழி பாதையில் செல்வதால் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுகிறது
எனவே தேசிய நெடுஞ்சாலை பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களிடத்தில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: திருச்சி சிவா? மயில்சாமி அண்ணாதுரை? I.N.D.I.A கூட்டணி வேட்பாளர் யார்? நீடிக்கும் இழுபறி!!