வானில் ஆயிரம் அற்புதங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அதில் ஒன்றாக சந்திர கிரகணமும் உள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் போது சில நேரங்களில் நிலவு சிவப்பாக மாறும் நிகழ்வும் ஏற்படுகிறது. அதற்கு ரத்த நிலா, அதாவது பிளட் மூன் என்று பெயர். பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக வரும்போது இந்நிகழ்வு நிகழ்கிறது. சந்திரனை மறைத்திருக்கும் பூமி தன்மீது விழும் ஒளியை வளிமண்டலம் மூலமாக சிதறடிக்கிறது அவ்வாறு சிதறடிக்கப்படும் நிறங்களில் சிவப்பு அப்படியே தங்கி நிலவின் மீது விழும் இதுவே நிலா ரத்த சிவப்பு நிறத்தில் தெரிய காரணம் என நாசா விளக்கம் அளித்துள்ளது.
ஆசிய நாடுகள் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்த முழு கிரகணத்தையும் அதன் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாகக் காண முடியும். உலகின் மற்ற பல பகுதிகளில், கிரகணத்தின் சில கட்டங்களை மட்டுமே காண முடியும். செப்டம்பர் 7 அன்று நிகழும் முழு சந்திர கிரகணத்தை, இந்தியா, சீனா, ரஷ்யா, மேற்கு ஆஸ்திரேலியா, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகள் போன்ற பகுதிகளில் தெளிவாகக் காணலாம். வட அமெரிக்காவில் இது தெரியாது. இருப்பினும், அலாஸ்காவின் மேற்குப் பகுதியில் பகுதி சந்திர கிரகணத்தைக் காண முடியும்.
இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பாவில், நிலா உதிக்கும்போது கிரகணத்தின் ஒரு பகுதி தெரியும். இந்தியாவில் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 11:00 மணி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை 12:22 மணி வரை கிரகணம் நன்றாக தெரியும். இருப்பினும், முழு கிரகணமும் இரவு 8:58 மணி முதல் அதிகாலை 2:25 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் மொத்தம் 82 நிமிடங்கள் நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்தின் நியாயமான கோரிக்கை.. மத்திய நிதியமைச்சர் ஏற்பார் என நம்புகிறேன் - முதல்வர் ஸ்டாலின்..!
நகரத்தின் விளக்கு ஒளிகளில் இருந்து விலகி திறந்த பகுதிகளில் வெறும் கண்களாலேயே கூட இந்த சிவப்பு நிலவை பார்க்க முடியும் என்றும், தொலைநோக்கி தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: துணை ஜனாதிபதி தேர்தல் - முதல்வரின் முடிவே என் முடிவு.. கமல்ஹாசன் எம்.பி கருத்து..!!