• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    2029-ல் "ஒரே நாடு ஒரே தேர்தல்"? 3 ஆண்டுகளிலேயே முடிவுக்கு வருமா தவெக ஆட்சி?

    2029-ல் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம் அமலாக வாய்ப்பு இருப்பதால், தமிழகத்தில் தவெக அரசின் பதவிக்காலம் 3 ஆண்டுகளில் முடிவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Tue, 25 Aug 2026 12:25:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    one-nation-one-election-likely-to-come-into-effect-in-2029

    இந்தியாவில் மக்களவைக்கு 543 தொகுதிகளும், மாநில சட்டப்பேரவைகளுக்கு சுமார் 4,123 தொகுதிகளும் உள்ளன. உத்தரபிரதேசத்தில் மட்டும் 80 மக்களவை தொகுதிகளும் 403 சட்டப்பேரவை தொகுதிகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளும் 234 சட்டப்பேரவை தொகுதிகளும் உள்ளன. சில சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு மக்களவை தொகுதி மட்டுமே உள்ளது. இந்த அளவுக்கு பெரிய தேர்தல் அமைப்பில், அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் நிர்வாகத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன என்பது அரசின் நிலைப்பாடு.

    நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்றாலும், மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால் மாநிலங்களில் ஐந்தாண்டு முடிவடையும் போது தனித்தனியாக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதனால் தேர்தல் செலவுகள் அதிகரிக்கின்றன, நிர்வாகத் திறன் பாதிக்கப்படுகிறது, தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வளர்ச்சிப் பணிகள் தடைபடுகின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் முன்வைக்கப்பட்டது.

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி அறிக்கை அளித்தது. அதைத் தொடர்ந்து 2024 டிசம்பர் குளிர்காலக் கூட்டத்தொடரில் அரசியலமைப்பு 129-வது திருத்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அரசியலமைப்பு திருத்தம் என்பதால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. 

    இதையும் படிங்க: தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    பாஜக எம்.பி. பி.பி.சவுத்ரி தலைமையில் அமைந்த இந்தக் குழு சட்ட நிபுணர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருடன் விரிவான ஆலோசனைகளை நடத்தி வருகிறது. நேற்று டெல்லியில் நடைபெற்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பி.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது என்றும் இந்த யோசனையை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

    One Nation One Election

    கூட்டம் முடிந்ததும் பி.பி.சவுத்ரி நிருபர்களிடம் பேசுகையில், “பல்வேறு தரப்பினருடன் பலமுறை ஆலோசித்தோம். அவர்களில் 99 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்களும் ஆதரவு தெரிவித்தால் 2029 மக்களவைத் தேர்தலிலேயே இந்தத் திட்டத்தை அமல்படுத்தலாம்” என்றார். அரசியலமைப்பு திருத்தம் 2028-க்குள் நிறைவேற்றப்பட்டு மாநில அரசுகளின் ஒப்புதல் கிடைத்தால் இது சாத்தியம் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்தத் திட்டம் 2029-ல் அமலுக்கு வந்தால் பல மாநிலங்களின் பதவிக்காலம் சுருங்கும். 2026-ல் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகியவற்றில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் பதவிக்காலம் சுமார் மூன்று ஆண்டுகளில் முடிந்துவிடும். அதாவது, தமிழகத்தில் தவெக அரசின் பதவிக்காலம் 3 ஆண்டுகளில் முடிந்துவிடும் ஆபத்து இருக்கிறது.

    2027-ல் தேர்தல் உள்ள உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, குஜராத், மணிப்பூர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் புதிய அரசுகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகக் குறையும். 2028-ல் தேர்தல் நடைபெறும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பதவிக்காலம் ஒரே ஆண்டாகச் சுருங்கும். இதனால் பாஜக அல்லாத மாநிலங்கள் இந்தத் திட்டத்தை எதிர்ப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    குறிப்பிடத்தக்க வகையில், சுதந்திரம் பெற்ற பிறகு 1952 முதல் 1967 வரை நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. பின்னர் பல்வேறு காரணங்களால் இது மாறியது. தற்போது கூட்டுக்குழுவின் ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையம் ஆறு மாத முன்னறிவிப்பு இருந்தால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் நிர்வாகத் திறனையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துமா அல்லது கூட்டாட்சி அமைப்பைப் பாதிக்குமா என்ற விவாதம் தொடர்கிறது.

    இதையும் படிங்க: பெயரை மாற்றினாலும் ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்கள் அழியாது...தவெக அரசை சாடிய ஆர்.எஸ்.பாரதி!

    மேலும் படிங்க
    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    குற்றம்
    சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!

    சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    தமிழ்நாடு
    இனிமே யாருக்கும் நைட்டு தூக்கமில்லை..!! பித்துபிடிக்க வைக்கும் பிக்பாஸ் சீசன் 10.. ரிலீஸ் தேதி அப்டேட் சுடசுட வந்தாச்சி..!

    இனிமே யாருக்கும் நைட்டு தூக்கமில்லை..!! பித்துபிடிக்க வைக்கும் பிக்பாஸ் சீசன் 10.. ரிலீஸ் தேதி அப்டேட் சுடசுட வந்தாச்சி..!

    சினிமா
    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    குற்றம்
    சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!

    சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை vs லாட்டரி மருமகன்..! களேபரமான சட்டமன்றம்... மாறி மாறி கருத்து மோதல்..!

    தமிழ்நாடு
    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    இன்று முதல் அதிரடி மாற்றம்... கடலை மிட்டாய் பிரியர்களுக்கு செம்ம ஷாக்... இடியை இறக்கிய உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?

    கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share