72வது மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டி, இந்த ஆண்டு பெரும் விமர்சனத்துடன் இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் மையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தியாவில் இது 3-வது முறையாக மிஸ் வேர்ல்ட் போட்டி நடைபெறுவதாகும். இதற்கு முன்பு 1996 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் இந்தியா இந்த பெரும் போட்டிக்கு ஒய்விடம் அமைக்கப்பட்டது. மும்பையில் நடந்தபோட்டியின் இறுதி சுற்றில், செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா வெற்றி பெற்று, 71வது மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்றார்.

அவர் நடப்பு போட்டியில் வெற்றி பெறும் புதிய மிஸ் வேர்ல்டு போட்டியாளருக்கு கிரீடம் அணிவிப்பார். இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்பதற்காக 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்தியா சார்பில், 'மிஸ் இந்தியா' பட்டம் வென்ற நந்தினி குப்தா பங்கேற்றார். ஆனால் முதல் 8 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை அவர் தவறவிட்டார். இந்நிலையில் இறுதி சுற்று இன்று நடந்தது. அழகிகளுக்கு இடையே விளையாட்டு, தனித்திறமை, நடனப்போட்டிகள் நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: அஞ்சலையம்மாளின் 135-ம் பிறந்தநாள்.. அவரது பெருமையை போற்றுவோம்.. தவெக தலைவர் விஜய்..!

இதில் தாய்லாந்தின் ஓபல் சுச்சதா சுவாங் ஸ்ரீ 2025ம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்வானார். எத்தியோப்பியாவை சேர்ந்த ஹசேட் டெரேஜே அட்மாசு 2வது இடத்தை பிடித்தார்.போலந்து அழகி 3வது இடத்திலும், மார்டினிக் அழகி 4ம் இடமும் பிடித்தனர். 71வது உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பைஸ்கோவா, இந்த ஆண்டு பட்டம் வென்ற ஓபலுக்கு மகுடம் சூடினார். 2003ம் ஆண்டு மார்ச் 20ல் தாய்லாந்தின் கடற்கரை நகரமான ஃபூகெட்டில் பிறந்தவர் ஓபல்.


ஹோட்டல் உரிமையாளர்களின் மகளான இவர், தாய், ஆங்கிலம், சீனம் என மூன்று மொழிகளில் பேசுபவர். ஓபலின் கல்விப் பயணம் பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற ட்ரைம் உடோம் சுக்ஸா பள்ளியில் தொடங்கியது. தற்போது, அவர் தம்மசாத் பல்கலையில் அரசியல் அறிவியல் படிக்கிறார். அவருக்கு அணிவித்த கிரீடத்தில் 175.49 காரட் எடையில் 1,770 ஜொலிக்கும் வைரங்கள் உள்ளன. அவற்றுடன் ரூ.3 கோடி மதிப்பிலான 18-காரட் வெள்ளை தங்கமும் இருக்கும். இதுதவிர, ரூ.1.15 கோடி பரிசு தொகையும் கிடைக்கும்.
இதையும் படிங்க: அடுத்தது தமிழகத்தில் நம் ஆட்சி தான் நடக்க வேண்டும்.. ஒரே போடு போட்ட அன்புமணி ராமதாஸ்..!