இலங்கையின் நாவலப்பிட்டியில் 1917-ஆம் ஆண்டு இன்றைய தினம்தான் பிறந்தார் எம்.ஜி.ஆர். என்றாலும், தமிழக மண்ணில்தான் அவர் மக்களின் மனதில் அழியாத இடம் பிடித்தார். நடிகராகத் தொடங்கி, அரசியல்வாதியாக மாறி, முதலமைச்சராக ஆட்சி செய்து, எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்தவர். அவரது பிறந்த நாள் இன்று வெறும் தேதி அல்ல. அது ஒரு கொள்கையின் நினைவு நாள், மனிதநேயத்தின் கொண்டாட்ட நாள்.
இன்று தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் திலகம் வாழ்க என்ற முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. எம்ஜிஆரின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடி கலந்துகொள்ளும் போது கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பிரதமரின் கூட்டத்தில் பாஜக கூட்டணி தலைவர்கள் மேடை ஏற்றப்பட இருக்கும் நிலையில் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் எம்ஜிஆர் கனவு நிறைவேறும் என்று தெரிவித்தார். எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கண்டுக்காத எடப்பாடி! கலக்கத்தில் ஓபிஎஸ்! கூட்டணியா? தனிக்கட்சியா? 2வது நாளாக ஆலோசனை!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு குறித்து வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப் போவதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கியவர் எம்ஜிஆர் என்றும் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த அதிமுகவுக்கு வாருங்கள்!! ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு முன்னாள் அமைச்சர் அழைப்பு!