தமிழக அரசியலில் இன்று ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னர், ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சரின் அறைக்குச் சென்றார். அங்கு அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து உரையாடி உள்ளார்.
இதில் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடந்ததா என்பது அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும், இது வெறும் மரியாதை சந்திப்பு மட்டுமல்ல என்ற யூகங்கள் எழுந்தன. ஓ. பன்னீர்செல்வம் தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பின் மூலம் தனது அரசியல் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது குறித்து ஓபிஎஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. தமிழ்நாட்டுக்கு வழி பிறந்துள்ளது என்று பதில் கொடுத்தார். தொடர்ந்து திமுகவில் இணைவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பொறுத்து இருங்கள் என்றும் இல்லை என்று மறுக்காமல் ஓபிஎஸ் கூறியதும் அரசியலில் பேச பொருளாக மாறி உள்ளது.
இதையும் படிங்க: ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்...! முதல்வருடன் OPS திடீர் சந்திப்பு...!! சூடு பிடிக்கும் அரசியல்..!!
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து திமுக கூட்டணிக்கு தேமுதிக கட்சி வந்துவிட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்து வருகின்றனர். இன்று ஓபிஎஸ் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த வாழ்த்து தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஓபிஎஸ் திமுக பக்கம் சாய்வாரா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. 5 ஆண்டுகால சிறப்பான ஆட்சியை வாழ்த்துவதற்காக முதலமைச்சரை சந்தித்ததாக ஓபிஎஸ் தெரிவித்திருப்பதும் கவனத்தை பெற்றுள்ளது..
இதையும் படிங்க: NDA கூட்டணியில் இணையும் ஓபிஎஸ்..?? மீண்டும் தீயாய் பரவும் செய்தி..!! அரசியலில் அடுத்த ட்விஸ்ட்..!!