அதிமுக பாஜக கூட்டணி சேர்ந்துவிட்டது. அமித் ஷாவை நம்பி ஓ.பன்னீர்செல்வம் காத்திருந்த நிலையில், அவரோ அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது எனக்கூறிவிட்டார். இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை திரிசங்கு சொர்க்கம் போல அந்தரத்தில் ஊசலாடி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக அங்கம் வகிப்பதை கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி, எக்காரணம் கொண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் சேர்த்துக்கொள்ளவே மாட்டேன் என அடம்பிடித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக, அதிமுக கைகளிலிருந்து நழுவிய பிறகு மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்தித்தார். ஓபிஎஸ் திமுக தொண்டர்களின் பலம் தனக்குதான் இருக்கிறது என காட்ட நினைத்த ஓபிஎக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதேபோல் மீண்டும் அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும் என ஓபிஎஸ் வெளிப்படையாகவே சொல்லி வந்தும் இபிஎஸ் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. அதிமுக பாஜக கூட்டணி உருவாகும்போது ஓபிஎஸ் பற்றி அமைச்சர் அமித்ஷா பேசியும் இபிஎஸ் விடாப்பிடியாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் கூட்டணியும் உருவாகிவிட்டதால் ஓபிஎஸ் நிலை என்ன என்ற கேள்வி வந்தது. பாஜகவுடன் கூட்டணியில் நீடிக்கிறாரா? ஓபிஎஸ் அணிக்கு தொகுதிகளை ஒதுக்க இபிஎஸ் தயாராக இருக்கிறாரா? பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கிறது.
இதையும் படிங்க: இனி டைரக்டா பாஜகதான்.. ஓ.பி.எஸ் இறுதி முடிவு... முக்கிய பதவிக்காக துண்டு போட்டு காத்திருக்கும் பணிவு..!

இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பாக அவரின் ஆதரவாளர்களின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இன்றும் இந்த கூட்டம் நடக்கவிருக்கிறது. தேர்தல் தொடர்பாகவும் கூட்டணி தொடர்பாகவும் ஆலோசனை நடந்து வருவதாக சொல்கின்றனர். அதேபோல் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரும் எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் நிர்வாகிகளுடைய கருத்துக்கள் கேட்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோமா என்பதை வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் விளக்கம் கொடுப்பார் என்றார்.

மேலும் அதிமுக பாஜக கூட்டணியில் ஓபிஎஸக்கு முக்கியத்துவம் இருக்கிறதா? என கேட்டதற்கு எங்களை தவிர்க்க முடியாது என கூறியுள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் நீடிக்க போகிறாரா? அல்லது முறித்து கொள்ள போகிறாரா என்ற விவாதம் எழுந்துள்ளது. கூட்டணியில் அதிமுகவிடம் பவர் இருப்பதால் ஓபிஎஸ்க்கு செக் வைக்கக்கூடிய முடிவுகளையே இபிஎஸ் எடுப்பார் என சொல்கின்றனர். அதனால் வேறு கூட்டணிக்கு போகலாமா என்று கூட அவரது ஆதரவாளர்கள் ஓபிஎஸ் இடம் யோசனை சொன்னதாக கூறப்படுகிறது.

அதாவது தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமா என்றும் ஆலோசனை நடந்ததாக தெரிகிறது. விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்பதால் மூன்றாவதாக உருவாகும் அணியுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமா என்ற பேச்சும் அடிபட்டதாக சொல்கின்றனர்.
இதையும் படிங்க: அவருக்கு சமமா என் ஃபோட்டோவா? கத்தியை கையில் எடுத்த புஸ்ஸி ஆனந்த்... என்ன செய்தார் தெரியுமா?