தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சியும், குமரிக்கடல் முதல் தென்மேற்கு மத்தியப் பிரதேசம் வரை காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் நிலவுவதால் இந்த மழைப் பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டி வரும் நிலையில், இன்று மற்றும் நாளை கோவை, நீலகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இன்று தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: எல்லாருக்கும் ஃபோன் வரும்... பயப்படாதீங்க..! பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்..!
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், சிட்லபாக்கம், சேலையூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதற்கிடையில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கப்போகும் மழை..!! லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கானு தெரிஞ்சிக்கோங்க..!!