ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாகிஸ்தான் தாக்குதல்கள் தொடர்பாக ஆக்ரோஷமான கருத்துகளையும் செயல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த ஆந்திராவைச் சேர்ந்த ராணுவ வீரர் முரளி நாயக் உடலுக்கு பவன் கல்யாண் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்த சம்பவத்தில் அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும் கூறப்படுகிறது.

''பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அங்கேயே செல்ல வேண்டும். தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு எந்த பரிவும் காட்டக் கூடாது'' என கடுமையாக கருத்துக்களை முன் வைத்து வருகிறார். ஆந்திராவில் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி விலக்கு அளிப்பது உள்ளிட்ட அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழர்களுக்காக காட்டமாக குரல் எழுப்பிய பவன் கல்யாண் - ஏன் இந்த திடீர் பாசம்?
இந்நிலையில் பவன் கல்யாண் தனது எக்ஸ்தளப்பதிவில் திருவள்ளுவரின் திருக்குறளில் 763, குறளை மேற்கோள் காட்டி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ''ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்'' என்ற குறளை, தமிழ், கிலம், இந்தி, தெலுங்கில் பதிவிட்டுள்ளார். 
''எலிகள் கூடி கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்'' என்பதே இந்தக் குரலின் அர்த்தம். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் சேஷ்நாக் என்ற புராணப் பாம்பையும், எலிகளைத் தோற்கடிப்பதையும், எதிரிகளை வெல்லும் இந்தியாவின் இராணுவ வலிமையையும், குறிப்பாக ஆபரேஷன் சிந்தூரைக் குறிப்பிடுகிறது.
An excerpt from Thiruvalluvaar’s ‘Thirukkural.’
763: ஒலித்தக்கால் என்னாம் உவரி
எலிப்பகை ? நாகம் உயிர்ப்பக்
கெடும்.
Hindi : अगर (दुश्मन) चूहों की पूरी फौज भी समुद्र
की तरह गरजने का मिथ्याभास करने लगे,
तो भी वे… pic.twitter.com/5o4bdkrJMe
— Pawan Kalyan (@PawanKalyan) May 12, 2025
ஏவுகணை ஏவுதளத்தில் பல தலைகள் கொண்ட பாம்பின் உருவகம் இந்தியாவின் பாதுகாப்புப் படைகளைக் குறிக்கிறது. இந்த வசனம் ஒற்றுமை, வலிமையை வலியுறுத்துகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகவும் பாஜக கூட்டாளியாகவும் கல்யாணின் அரசியல் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை அவர் பாராட்டுவதாக உள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸின் பாக்., விசுவாசிகளே... இந்தியாவை விட்டு ஓடிவிடுங்கள்... பவன் கல்யாண் ஆவேசம்..!