புதுடில்லி: நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் ரக்ஷா பந்தனை கொண்டாடி மகிழ்ந்தார். குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
சகோதரத்துவத்தையும் அன்பையும் போற்றும் முக்கியமான பண்டிகையாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களுடன் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்வது வழக்கம். இதையொட்டி நாடு முழுவதும் மக்கள் ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரது வாழ்த்து செய்தியில், இந்த புனிதமான திருநாள் அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, வளம் மற்றும் வெற்றியை கொண்டு வர வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அன்பு, பாசம் மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உறவு என்றும் வலுவாக இருக்க வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: மோடிக்கு சரியும் ஆதரவு? இன்று தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு எத்தனை இடங்கள்... சி-வோட்டர் சொன்ன அதிர்ச்சி கணக்கு!

இதைத்தொடர்ந்து, டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பள்ளிக் குழந்தைகளை சந்தித்தார். குழந்தைகள் ஆர்வத்துடன் பிரதமருக்கு ராக்கி கட்டினர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி, ரக்ஷா பந்தன் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது குழந்தைகளுடன் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டார். குழந்தைகளும் பிரதமருடன் ரக்ஷா பந்தனை கொண்டாடியதை உற்சாகமாக அனுபவித்தனர். பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படங்களை பிரதமர் மோடியும் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்துள்ளார். குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய தருணத்தை மறக்க முடியாத தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் தினத்தன்று பல்வேறு தரப்பினருடன் பிரதமர் மோடி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பள்ளிக் குழந்தைகளுடன் பிரதமர் அலுவலகத்தில் அவர் ரக்ஷா பந்தனை கொண்டாடிய காட்சிகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
அரசியல் நடவடிக்கைகளுக்கு நடுவே குழந்தைகளுடன் பிரதமர் மோடி பண்டிகையை கொண்டாடிய இந்த தருணங்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, குழந்தைகள் பிரதமருக்கு ராக்கி கட்டும் புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகி வருகின்றன.
இதையும் படிங்க: மோடியை சந்திக்க இந்தியா வருகை? நேபாள பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் குறித்து முக்கிய தகவல்!