திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை வெள்ளியம்பாளையம் ஊராட்சி பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக கைது செய்த போலீசார்
திருப்பூர் மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டுவதற்கு பல்வேறு பகுதிகளில் பயன்பாடற்ற பாறைக்குழிகளை தேர்வு செய்து குப்பை கொட்டி வருகிறார்கள் அதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.இதன் காரணமாக திருப்பூர் மாநகர் பகுதிகளில் சுமார் 15 நாட்களுக்கு மேலாக குப்பை எடுக்காமல் அனைத்து பகுதிகளுமே குப்பைகள் மலை போல தேங்கி இருக்கிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை ஊத்துக்குளி தாலுக்கா வெள்ளியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பயன்பாடற்ற பாறைக்குழியில் மாநகராட்சி சார்பில்இன்று காலை சுமார் பத்துக்கும் மேற்பட்ட குப்பை லாரிகள் குப்பை கொட்டுவதற்கு வருகை புரிந்த பொழுது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் லாரிகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 2வது மாநாட்டிற்கு ரெடியாகும் தவெக.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கட்சி தலைமை..!!
மறியல் போராட்டத்தினால் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால்மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக வாகனத்தில் ஏற்றி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டு போலீசார் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: நேதாஜி பயந்து ஓடுனாரா? கேரளா பாடநூலில் வரலாற்று பிழை!! கொந்தளிக்கும் மக்கள்..!!