ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியா வந்துள்ளார். ஒரு வாரம் அதிகாரப்பூர்வ பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், நேற்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. தாலிபான் தாங்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான விதித்து வரும் நிலையில், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்வில் இருந்து பெண்களை விலக்கும் கொள்கைகளை திரும்பப் பெற தாலிபான்களை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண் பத்திரிகையாளர்களை அனுமதிக்காத போதே ஆண் பத்திரிகையாளர்கள் வெளிநடப்பு செய்த தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்க வேண்டும் என்றும் பெண் பத்திரிகையாளர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது ஏற்கவே முடியாதது என்றும் விமர்சித்து வருகின்றனர். பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்தது குறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். பெண் பத்திரிகையாளர்களை பொது மேடையில் இருந்து விலக்கி வைக்க பிரதமர் மோடி அனுமதிக்கும்போது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நீங்கள் அவர்களுக்காக நிற்க மிகவும் பலவீனமானவர் என்று சொல்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என்னங்க பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு... ஜோதிமணி முன்பே காங்கிரஸை கழுவி ஊற்றிய ஐ.பெரியசாமி...!
நமது நாட்டில், எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சமமாக பங்கேற்க உரிமை உண்டு என்று தெரிவித்தார். இத்தகைய பாகுபாட்டை எதிர்கொள்ளும் போது பிரதமரின் மௌனம், அவரது முழக்கங்களின் வெறுமையை அம்பலப்படுத்துகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மேல ஏன் பழி போடுறீங்க? என்ன நடந்துச்சு பாத்தீங்களா... கே.எஸ் அழகிரி விளக்கம்!