• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    சட்டமன்றத்தில் 'கன்னிப் பேச்சு' என்ற சொல்லுக்குப் பதிலாக 'அறிமுக உரை' என மாற்றக்கோரிய கோரிக்கையை வழிமொழிந்த அமைச்சருக்கு வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 24 Aug 2026 21:09:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Replace 'Maiden Speech' with 'Introductory Speech' in Assembly": Vanathi Srinivasan thanks Minister Rajmohan

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்முறையாகப் பேசும் உறுப்பினர்களின் உரையை கன்னிப் பேச்சு என்று அழைக்காமல், அறிமுக உரை அல்லது முதல் உரை என்று நாகரிகமாக அழைக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் கோரிக்கையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் வழிமொழிந்து பேசியதற்கு பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நெகிழ்ச்சியுடன் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், கடந்த 2021-ஆம் ஆண்டு தாம் கோவை தெற்கு தொகுதியிலிருந்து முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்துள்ளார்.

    Assembly

    அப்போது அவையில் பேசிய பலரும் தங்களது முதல் உரையை 'கன்னிப் பேச்சு' என்று குறிப்பிட்டதாகவும், கன்னி என்ற சொல் இளம் வயதுப் பெண்ணைக் குறிக்கும் சொல்லாக இருப்பதால், சட்டப்பேரவையில் முதல் உரையை நிகழ்த்துவதை அறிமுகப் பேச்சு அல்லது முதல் பேச்சு என்று குறிப்பிடுவதே கண்ணியமாகவும் நாகரிகமாகவும் இருக்கும் என அன்றைய சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசிலும் அதே சொல் புழக்கத்தில் இருந்ததால், இதனை மாற்றி அறிவிக்குமாறு அண்மையில் தாம் விடுத்த கோரிக்கை பரவலான வரவேற்பைப் பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மாணவர்களுக்கு குட் நியூஸ்..! ரூ. 20 லட்சம் பிணையில்லா கடன்.. விஜய் அரசின் மெகா அறிவிப்புகள்..!!

    இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பாமக சட்டமன்றக் கட்சித் தலைவர் சௌமியா அன்புமணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் லதா ஆகியோர், அவையில் கன்னிப் பேச்சு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

    இதற்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கடந்த சட்டமன்றத்தில் வானதி சீனிவாசன் இந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக அறிமுக உரை என்று அழைக்கலாம் என்றும் ஆலோசனைக் கூறியிருந்தார்; எனவே சட்டப்பேரவைத் தலைவர் இதனைப் பரிசீலித்து நடைமுறைக்குக் கொண்டுவர ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அவையில் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.

    தனது நியாயமான கோரிக்கையை ஏற்றுச் சட்டமன்றத்தில் வழிமொழிந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கும், இதற்காகக் குரல் கொடுத்த பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ள வானதி சீனிவாசன், இனி வரும் காலங்களில் சட்டமன்றத்தில் பேசும் எந்தவொரு உறுப்பினரும் 'கன்னிப் பேச்சு' என்ற சொல்லைத் தவிர்த்து, அறிமுக உரை அல்லது முதல் உரை என்றே பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!

    மேலும் படிங்க
    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை! விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு!

    தமிழ்நாடு
    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!

    தமிழ்நாடு
    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

    தமிழ்நாடு
    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு
    பணி நிரந்தரம் கோரிய தூய்மை பணியாளர்கள் கைது! SDPI தலைவர் நெல்லை முபாரக் கண்டனம்!

    பணி நிரந்தரம் கோரிய தூய்மை பணியாளர்கள் கைது! SDPI தலைவர் நெல்லை முபாரக் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share