சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள பச்சை மலையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக பச்சமலை மலைவாழ் மக்கள் ஊர் கூட்டம் போட்டு தீர்மானம் .
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள பச்சமலை மலைப்பகுதி சேலம் மற்றும் திருச்சி மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது, இந்த மலை பகுதியில் சேலம் மாவட்டத்தில் பச்சமலை என்கிற ஒரு ஊராட்சியும் , திருச்சி மாவட்டத்தில் தென்புற நாடு, வன்னாடு, கோம்பை நாடு, ஆகிய நான்கு ஊராட்சிகளில் பெரியபக்களம், ஓடை காட்டு புதூர், பெரிய மங்களம், பெரிய நாகூர், மாயம்பாடி, டாப் செங்காட்டுப்பட்டி, புத்தூர், நஜீலிப்பட்டி, பூதக்கால், தோனூர், | மனலோடை, மருதை , செம்புளிச்சாம்பட்டி, சின்ன எழுப்பூர், உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மலை கிராமத்தில் விளையக்கூடிய மரவள்ளிக் கிழங்கு, காய்கறி உள்ளிட்ட விவசாய விலை பொருட்களை மலை பகுதியில் உள்ள 11 கொண்டை ஊசி வளைவு பகுதியாக தான் சென்று வர வேண்டும். மேலும் பச்சமலையில் உள்ள ஆத்திநாடு, தென்புரநாடு, வண்ணாடு, கோம்பைநாடு ஆகிய நான்கு பஞ்சாயத்துகளையும் இணைத்து, பச்சமலையை ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்றும், பச்சமலையில் உள்ள ஆத்திநாடு, வண்ணாடு ஆகிய பஞ்சாயத்துகளுக்கு தலா ஒரு புதிய பேருந்து இயக்க வேண்டும் .
இதையும் படிங்க: “ஓட்டு போடப்போற பொண்ணே கலங்கி நிக்காத...” - பாட்டு பாடி வாக்குசேகரித்த சீமான்... அனல் தெறிக்க பேச்சு...!
பச்சமலை வழிச்சாலையை அகலப்படுத்தி இரு வழிச்சாலையாக அமைத்து தர வேண்டும், பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டு கிராமப் பகுதிகளில் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவிக்கும் விதமாக போஸ்டர்களை ஒட்டியும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து 2 மாதங்களாகியும் பேச்சுவார்த்தை நடத்த வருவாய்த்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் யாரும் வராததால் ஆத்திரமடைந்த 30-க்கும் மேற்பட்ட குக்கிராம மலைவாழ் மக்கள் டாப் செங்காட்டு பட்டியில் ஒன்று திரண்டு கிராம பகுதிகளுக்கு வாக்கு கேட்டு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ யாரும் உள்ளே வர வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஊர் எல்லையில் ப்ளக்ஸ் பேனர்கள் வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது,
இதனை தொடர்ந்து அங்கு சென்ற தம்மம்பட்டி போலீசார் மலைவாழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடத்தினார்கள் ஆனால் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தால் தான் தேர்தல் புறக்கணிப்பை கைவிடுவோம் என்று போலீசாரிடம் மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: NDA கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு?... இன்றே கையெழுத்தாகிறது ஒப்பந்தம்...!