பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன. இருப்பினும் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், சென்னை பாரிமுனை குறளகம் முதல் கோட்டை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி செல்ல முயன்றனர். குறளகம் வருகைக்கு முன்னதாகவே பிராட்வே பேருந்து நிலையத்தில் வைத்தே போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்யும் முயன்றனர். வலுக்கட்டாயமாக கைது செய்வதை எதிர்த்து வாகனங்களின் டயருக்கு அடியில் படுத்து போராடினர்.
இதையும் படிங்க: அண்ணா அறிவாலயம் முன்பு போலீஸ் குவிப்பு... தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் முன்னெச்சரிக்கை...!
பெண் ஒருவர் டயருக்கு அடியில் படுத்து போராடிய போது அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த பெண் போலீசார் முயன்றனர். இதனிடையே போராட்டத்தின் போது மற்றொரு பெண் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டது. அவர் சாலையில் மூச்சு பேச்சில்லாமல் விழுந்ததை அடுத்து முதலுதவி அளிக்கப்பட்டது. சாலையில் அமர்ந்து போராடிய தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
இதையும் படிங்க: அண்ணா அறிவாலயம் முன்பு போலீஸ் குவிப்பு... தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் முன்னெச்சரிக்கை...!