பிப்ரவரி 7-ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து, பாதுகாப்பு காரணங்களைக் கூறி வங்கதேச அணி விலகியுள்ளது. தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தரவரிசையில் முன்னிலையில் இருந்த ஸ்காட்லாந்து அணி மாற்று அணியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட ஸ்காட்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரிச்சி பெரிங்டன் தலைமையிலான இந்த அணியில் அனுபவம் மற்றும் இளமை கலந்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். டாம் புரூஸ், மேத்யூ கிராஸ், பிராட்லி கியூரி, ஆலிவர் டேவிட்சன், கிறிஸ் கிரீவ்ஸ், ஜைனுல்லா இஹ்சான் (அறிமுக வேகப்பந்து வீச்சாளர்), மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், ஃபின்லே மெக்ரீத், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சபியான் ஷெரிப், மார்க் வாட், பிராட்லி வீல். ஆப்கானிஸ்தானில் பிறந்து, சமீபத்தில் ஸ்காட்லாந்து குடியுரிமை பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஜைனுல்லா இஹ்சான் முதல் முறையாக சர்வதேச அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காட்லாந்து அணி 'சி' பிரிவில் (Group C) இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நேபாளம் மற்றும் இத்தாலி ஆகிய அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. ஸ்காட்லாந்து தனது முதல் போட்டியில் பிப்ரவரி 7-ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: "T20 World Cup-ல் ட்விஸ்ட்!" வேற ஊர்ல வைங்க! - இந்தியா வராமல் அடம் பிடிக்கும் வங்கதேசம்.. ஷாக் ஆன ICC!
வங்கதேசத்திற்கு பதில் கடைசி நேரத்தில் கிடைத்த இந்த வாய்ப்பை ஒரு பொன்னான வாய்ப்பாக கருதுவதாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ ட்ரூடி லிண்ட்ப்ளேட் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “கருப்பை வாய் புற்றுநோய் இனி இல்லை!” - இளம்பெண்களுக்கு இலவச HPV தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கும் முதல்வர்.