தமிழ்நாட்டில் பெண்கள், மாணவிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐஜி கே. பவானீஸ்வரி, பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அவசர உதவிக்கு தனி எண் எதுவும் தேவையில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
பொதுவான அவசர உதவி எண்ணான 100ஐ தொடர்பு கொண்டால் போதும் என அவர் வலியுறுத்தியுள்ளது பலருக்கு நிம்மதியை அளித்துள்ளது. சிங்கப்பெண் அதிரடிப்படை என்பது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதையும், உடனடி நடவடிக்கை எடுப்பதையும் முதன்மை நோக்கமாகக் கொண்ட அனைத்து பெண் காவலர்கள் அடங்கிய சிறப்புப் படை. இதற்கு ஐஜி பவானீஸ்வரி தலைமை தாங்குகிறார்.

இந்தப் படைக்கென பிரத்தியேக சீருடை, அதிநவீன ரோந்து வாகனங்கள், ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக இந்தப் படை களமிறங்கி, பேருந்து நிலையங்கள், பொது இடங்கள், ஐடி நிறுவனங்கள் மற்றும் இரவு நேரப் பயணப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடும். ஐஜி பவானீஸ்வரியின் கூற்றுப்படி, பெண்கள் எந்தவித அவசர நிலையிலும் 100ஐ அழைத்தால், சிங்கப்பெண் அதிரடிப்படை உடனடியாக செயல்படும். தனி எண் ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரத்யேக ஜீப், சிறப்பு சீருடை... கம்பீர நடையுடன் சிங்கப்பெண் படை திட்டம்..! நாளை அறிமுகம்..!!
ஏற்கெனவே உள்ள 100 கட்டுப்பாட்டு அறை மூலமாகவே இந்தப் படையின் பணிகள் ஒருங்கிணைக்கப்படும். இது பெண்களுக்கு எளிதான அணுகலை உறுதி செய்கிறது மற்றும் நேரத்தை வீணாக்காமல் உடனடி உதவியை வழங்கும். முதலமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தபோது, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 'ஜீரோ டாலரன்ஸ்' கொள்கையைப் பின்பற்றுவதாக வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கமாண்டோ ஸ்டைலில் கலக்கும் சிங்கப்பெண் படை... வைரலாகும் புதிய லுக்..!