நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லைகளைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது இடங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவதாலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தெருநாய் கடியால் கடுமையாகப் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருவதாலும் இது தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. அந்த உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை தாமாக முன்வந்து (Suo Motu) எடுத்துக்கொண்டு தீவிரமாக விசாரித்து வருகிறது.
இதையும் படிங்க: பைக் பேரணிக்கு கிரீன் சிக்னல்! நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தும் பேரணிக்கு அனுமதி!
இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தெருநாய் அச்சுறுத்தலைத் தடுக்கவும், விலங்கு இனப்பெருக்கக் கட்டுப்பாடு விதிகளை முறையாகச் செயல்படுத்தவும் இதுவரை எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர். மேலும், உரிய பதிலை விரைந்து தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த உயர்நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை! சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!